லைன்மேன் திரைப்பட விமர்சனம்

 

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் உள்ள உப்பளம் மின் மையத்தில் லைன்மேனாக சார்லி பணியாற்றி வருகிறார். மின் பொறியியல் பட்டதாரியான சார்லியின் மகன் ஜெகன் பாலாஜி, தனது கண்டுபிடிப்புகள் மூலம் எளிய மக்களுக்கு உதவ நினைக்கிறார். அதற்காக மின் விளக்குகளை ஆன் மற்றும் ஆஃப் செய்வதற்கான தானியங்கி கருவி ஒன்றை அவர் உருவாக்குகிறார். அதற்கு அங்கீகாரம் பெறுவதற்காக முயற்சிக்கும் அவருக்கு செல்லும் இடம் எல்லாம் தோல்வி மட்டுமே கிடைக்க, துவண்டு போகாமல் தொடர்ந்து பயணிக்கிறார். ஆனால், முதலாளிகள் மூலமாக அவரது கண்டுபிடிக்கு எதிராக சில சதி வேலைகள் நடக்க, அந்த சதிகளில் இருந்து மீண்டு தனது முயற்சியில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை.


உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் என்பது இந்த படத்தை மனதோடு நெருக்கம் ஆக்கி விடுகிறது.கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஜெகன் பாலாஜி நடிப்புக்கு புதியவர் என்றாலும் அந்த கேரக்டரில் தன்னை வெகுவாக நிலை நிறுத்திக் கொண்டு விடுகிறார். சென்னை போய் முதலமைச்சரை பார்க்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் ஒரு கட்டத்தில் அவருக்கு குற்றவாளி முத்திரை குத்த, அந்தப் பதட்டமும் பரிதவிப்பும் ஜெகன் கண்களில் வெளிப்படுவது தேர்ந்த நடிப்பின் அடையாளம்.


ஜெகன் பாலாஜியின் அப்பாவாக சார்லி. படத்தின் லைன் மேன் இவர்தான். ஊருக்கு நல்லவராக மகனின் திறமை திறந்து அவனை மிச்சம் பாசத் தந்தையாக படம் முழுக்க அவருடைய நடிப்பு ராஜ்யம் விரவிக் கிடக்கிறது.


கலெக்டராக கொஞ்ச நேரமே வந்தாலும் அதிதி பாலன் தன் இருப்பை அட்டகாசமாய் பதிவு செய்துவிடுகிறார். நாயகியாக வரும் சரண்யா ரவிச்சந்திரன் உப்பள தொழிலாளர்களின் வலியை, எளிய காதலை மனதுக்குள் கடத்தி விடுகிறார். 


முதல் படத்திலேயே முத்திரை பதித்து இருக்கிறார் இயக்குநர் உதய்குமார். உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி உள்ள இப்படத்தை ஆஹா ஆஹா ஓடிடி தளத்தில் காணலாம்.

0 comments:

Pageviews