பணி திரை விமர்சனம்
கேரள மாநிலம் திருச்சூரில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தோடு வலம் வருகிறார் நாயகன் ஜோஜு ஜார்ஜ். அவருக்கு தெரியாமல் அங்கு எதுவும் நடக்காது என்ற சூழலில், குற்ற செயல்களில் ஈடுபடும் இரண்டு இளைஞர்கள் அவரது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார்கள். அவர்கள் மூலம் நினைத்து கூட பார்க்க முடியாத இழப்பு ஜோஜு ஜார்ஜுக்கு ஏற்படுகிறது. அதனால் அவர்களை பழி தீர்க்க, அவரது மொத்த சாம்ராஜ்யமே களத்தில் இறங்க, அந்த இளைஞர்கள் எதிர்பார்க்காத வகையில் பதிலடி கொடுக்கிறார்கள். இதனை கேள்விப்படும் ஜோஜு ஜார்ஜும் அவரது நண்பர்களும் இந்த இருவரையும் பழி வாங்க வலை வீசி தேடுகின்றனர். இதில் இருவரும் ஜோஜு ஜார்ஜுயையும், அவரது கூட்டாளிகளையும் ஒழித்து கட்டும் முடிவை எடுக்கிறார்கள். இந்நிலையில் விஷயங்கள் மோசமான திருப்பத்தை எடுக்கின்றன. இந்த இரண்டு இளைஞர்களுக்கும் கிரிக்கும் இடையே என்ன மோதல் நடக்கிறது? அதன் பின் ஜோஜு ஜார்ஜும் அவனது குடும்ப ஆட்களும் இரண்டு இளைஞர்களை எப்படி வேட்டையாடுகிறார்கள்? என்பதே விறுவிறுப்பான க்ளைமேக்ஸ்.
ஜோஜு ஜார்ஜ் நடிப்புத் திறமையை அனைவரும் அறிவார்கள். அதே நேரம், அவரது இயக்கத்தில் வரும் முதல் படம் என்பதால் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறார் ஜோஜூ.
ஆக்சன் காட்சிகளிலும் சரி, எமோஷனல் காட்சிகளிலும் சரி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். படத்தில் வரும் ட்விஸ்ட்டுகளும் கவனத்தை ஈர்க்கின்றன.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இரண்டு இளைஞர்களும் சிறப்பான நடிப்பை அளித்து உள்ளனர். அவர்கள் தான் ஒட்டுமொத்த படத்தையும் சுமக்கின்றனர்.
படம் துவங்கியதில் இருந்து இடைவேளை வரை பரபரப்புடன் கதை நகர்கிறது. இடைவேளை முடிந்து கிளைமாக்ஸ் வரும் வரை படம் மெதுவாக நகர்கிறது. ஆனால் அது அர்த்தமுள்ள நகர்வுதான். ஆகவே சுவாரஸ்யத்துக்கு குறைச்சல் இல்லை.
ஒளிப்பதிவு இசை ஆகியவை படத்துக்கு பலம்.
மொத்தத்தில் முதல் படத்திலேயே இயக்குநராக முத்திரை பதித்துவிட்டார் இயக்குனர் ஜோஜு ஜார்ஜ்.
0 comments:
Post a Comment