நண்பன் ஒருவன் வந்த பிறகு விமர்சனம்

 

அறிமுக இயக்குனர் ஆனந்த் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “நண்பன் ஒருவன் வந்த பிறகு”. 

இந்த படத்தில் ஆனந்த்கு ஜோடியாக பவானி ஶ்ரீ நடிக்க, இவர்களுடன் வெங்கட் பிரபு, கே பி. வொய் பாலா, இளங்கோ குமரவேல், ஆர்.ஜே. அனந்தி, ஆர்.ஜே. விஜய், இர்ஃபான், மதன் கௌரி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

இசை – ஏ.ஹெச்.காசிப் இசையமைத்திருக்கிறார்.

சிங்கப்பூரிலிருந்து சென்னை வரும் விமானத்தில் ஆனந்த் அமர்ந்திருக்க, தனது சக பயணியான டைரக்டர் வெங்கட் பிரபுவிடம் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பகிர்ந்து கொள்வதாக கதை தொடங்குகிறது.

கதையின் நாயகனான வரும் ஆனந்த் சிறு வயதில் ஆனந்தம் குடியிருப்பு பகுதிக்கு, குடி பெயர்ந்து வருகின்றனர்…அங்கு அவருக்கு நண்பர்கள் அமையவே,, அவர்களுடன் பள்ளி ,கல்லூரி, என்று ஒன்றாக படித்து, நண்பர்கள் அனைவரும் ஒன்றாகவே வேலையும் செய்ய வேண்டும் என்று ஸ்டார்ட் அப் கம்பெனி ஒன்று ஆரம்பிக்கவே, அது தோல்வியில் முடிய, நண்பர்கள் அனைவரும் சில மனஸ்தாபத்துடன் பிரிய நேரிடுகிறது …இதற்கிடையில் தனது காலனியில் கூடவே இருக்கும் பவானி ஶ்ரீ யை விரும்புகிறார்.. அவரும் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த வேலை வேண்டும் என்று சொல்ல ஆனந்த், மேல் படிப்புக்காக, சிங்கப்பூர் செல்ல நேரிடுகிறது….அங்கு அவருக்கு படிப்போடு சேர்ந்து வேலை கிடைத்ததா?? நாயகனின் ஸ்டார்ட் அப் கம்பெனி ஆசை என்னானது? நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதி கதை.

கதையின் நாயகன், இயக்குநர் என இரண்டு பொறுப்புக்களையும் தன் தோளில் சுமந்து இருக்கிறார், ஸ்கூல் பையன், கல்லூரி இளைஞன், வேலை தேடும் பட்டதாரி என வேரியே க்ஷன் காமிச்சியிருக்காரு..

நாயகி பவானி ஶ்ரீ க்கு நடிக்கும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும், வரும் இடங்களில் நிறைவு…

நடிப்பில் ஹீரோவை விட அவரது நண்பராக வரும் ஆர்.ஜே.விஜய் அதிகம் ஸ்கோர் செய்கிறார்.

நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, உழைத்து இருக்கிறார்கள் என்பது படத்திலும் தெரிய, அவர்கள் உழைப்புக்காக ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.

0 comments:

Pageviews