ஜமா திரை விமர்சனம்
திருவண்ணாமலையில் தெருக்கூத்து நடத்தி வரும் சேத்தன் குரூப்பில் ஹீரோ பெண் வேஷம் கட்டுபவராக இருக்கிறார். மகாபாரத திரௌபதியாக நடிக்கும் ஹீரோவுக்கு தொடர்ந்து அந்த கதாபாத்திரங்கள் தான் கிடைக்கிறது. ஆனால் அதையும் சந்தோஷமாக ஏற்று நடித்து வருகிறார். இது அவருடைய திருமணத்திற்கு பிரச்சினையாக வந்து நிற்கிறது. அதாவது பெண் வேடம் போடுவது பெண்களுடன் பழகுவது என இருப்பதால் ஹீரோவின் நடவடிக்கையில் பெண் சாயல் வருகிறது. அதனால் அர்ஜுனன் வேஷத்தில் நடிக்க சொல்லி அவரின் அம்மா வற்புறுத்துகிறார். அதை அடுத்து ஹீரோ சேத்தனிடம் இதைப் பற்றி தொடர்ந்து கேட்டு வருகிறார். ஆனால் அவமானம் தான் மிஞ்சுகிறது. பிறகு ஹீரோ அர்ஜுனன் வேஷம் போட்டாரா ? அவருக்கு திருமணம் நடந்ததா ? என்பதே படத்தின் மீதி கதை.
எழுதி இயக்கியிருக்கும் பாரி இளவழகனே கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.பெண் வேடம் போடும் கலைஞர் வேடத்தில் அவ்வளவு இயல்பாக இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி,திரைக்கதையின் தன்மையை முழுமையாக உள்வாங்கி நடித்திருக்கிறார். சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என்.மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் என படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவருமே படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறார்கள்.
இளையராஜாவின் இசை படத்திற்கு பெரும் பலமாக இருக்கிறது. நாம் மறந்து போயிருந்த ஒரு கலையை காட்சி வடிவில் நமக்கு காட்டிய ஜமா நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு படம் மட்டுமல்ல பாராட்ட வேண்டிய படமும் தான்.
0 comments:
Post a Comment