மழை பிடிக்காத மனிதன் திரை விமர்சனம்

 

சலீம் படத்தினுடைய தொடர்ச்சியாக தான் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சலீம் படத்தினுடைய கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகன் சலீம் அமைச்சருடைய மகனை கொலை செய்துவிட்டு தப்பித்து விடுவார். அங்கிருந்து தப்பித்து வரும் ஹீரோ விஜய் ஆண்டனி ஏஜெண்டாக மாறுகிறார். இதுதான் படத்தினுடைய ஒன்லைன் கதை. ஹீரோ விஜய் ஆண்டனி, சரத்குமார் ஒன்றாக இணைந்து ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். இப்படி இருக்கும் போது இவர் தனக்கு பிடித்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இருவருமே ஒன்றாக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த சூழலில் எதிர்பார்க்காத விதமாக விஜய் ஆண்டனியின் எதிரிகள் அவருடைய மனைவியை கொலை செய்து விடுகிறார்கள். அதோடு தன்னுடைய மனைவி இறந்தபோது மழை பெய்து இருந்ததால் விஜய் ஆண்டனி மழையை வெறுக்கிறார். அதேசமயம் நடந்த தாக்குதலில் விஜய் ஆண்டனியும் அவருடைய மனைவியும் இறந்துவிட்டார் என்று சரத்குமார் அனைவரையும் நம்ப வைக்கிறார். பின் விஜய் ஆண்டனியை அந்தமானுக்கு அனுப்பி வைக்கிறார். அதற்குப் பின் என்ன நடந்தது? விஜய் ஆண்டனி தன் மனைவியை கொன்றவர்களை பழி வாங்கினாரா? விஜய் ஆண்டனியின் வாழ்க்கை எப்படி மாறியது? அவருடைய மனைவியை கொலை செய்ததற்கு காரணம் என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. 


கதாநாயகனாக நடிகர் விஜய் ஆண்டனி சீரியஸான ஒரு கதாப்பிரத்துக்கு பொருத்தமாக இருக்கிறார். சரத் குமார் மற்றும் சத்யராஜ் இருவருமே கம்மியான காட்சிகளில் வந்து தங்களுக்கு கொடுக்கப்பட்ட வசனங்களை பேசி செல்கிறார்கள். சரண்யா பொன்வண்ணன் இயல்பான பாசமான அம்மாவாக அத்தோ கடை நடத்திவரும் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேகா ஆகாஷ் பெரிய அளவில் நடிப்புக்கான வாய்ப்பு இல்லை.


இயக்குநர் விஜய்மில்டனே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார்.அதனால் எழுத்தும் காட்சிகளும் நேர்க்கோட்டில் இணைந்து பயணிக்கின்றன.அது நல்ல காட்சியனுபவங்களைக் கொடுக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் விஜய்மில்டன், விஜய் ஆண்டனியின் தோற்றத்தை மாற்றியதில் தொடங்கி பல புதிய விசயங்களைச் செய்திருக்கிறார்.


மொத்தத்தில் மழை பிடிக்காத மனிதன்- விஜய் ஆண்டனி ரசிகர்களுக்கு மட்டும் ரசிகர்களுக்கு பிடிக்கும்

0 comments:

Pageviews