போட் திரை விமர்சனம்
இந்தியாவின் சுதந்திரத்துக்கு முன்பாக நடக்கும் இந்தக் கதையில், ஜப்பானியர்கள் சென்னை மீது குண்டு போடுகிறார்கள் என்பதால் மீனவரான யோகிபாபு தன் தாயுடன் கடலுக்குள் சென்று தப்ப முயல்கிறார். அவருடைய படகில் எம்.எஸ்.பாஸ்கர், சின்னிஜெயந்த், சாம்ஸ், ஷாரா, மதுமிதா ஆகியோருடன் ஒரு ஆங்கிலேயரும் சேர்ந்துகொள்கிறார். இவ்வளவு பேருடன் கடலுக்குள் செல்லும் படகுக்குள் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதே படத்தின் மீதி கதை.
யோகி பாபு படகோட்டியாக அசத்தலாக நடித்துள்ளார். எம்.எஸ். பாஸ்கர் ஸ்கோர் செய்கிறார். ஹீரோயினாக கெளரி கிஷன் அந்த கானா கர்நாடக சங்கீதம் பாடலில் ஸ்கோர் செய்து விட்டார். சாம்ஸ், ஷாரா, ஆங்கிலேய அதிகாரியாக நடித்துள்ள ஜெஸ்ஸி ஃபாக்ஸ் ஆலன், சின்னி ஜெயந்த், மதுமிதா மற்றும் லீலா என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஆளமான பின் கதையை அமைத்தும் அவர்களுக்கு எழுதப்பட்ட வசனங்களும் தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலமே. படகில் கடலுக்குள் நடக்கும் கதை என்பதால் போர் அடித்து விடாமல் இருக்கும் அளவுக்கு ஜிப்ரான் பின்னணி இசையில் பிரித்து மேய்ந்துள்ளார். லைஃப் ஆஃப் பை படத்தைப் போலவே படகை சுற்றியே படம் நகர்வதால் காட்சிகளை விட வசனங்கள் தான் படத்தை தாங்கிப் பிடிக்கின்றன. இதுபோன்ற ஒரு கதையை யோசித்ததற்காகவே சிம்பு தேவனை நிச்சயம் பாராட்டலாம்.
ஆக மொத்தம் இந்த போட்டை தாராளமாக தியேட்டரில் ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.
0 comments:
Post a Comment