நல்லபேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே திரைவிமர்சனம்

 

மதுரையை மையப்படுத்தி கதைக்களம் ஆரம்பிக்கிறது. தனது நண்பர்களுடன் சிகரெட் பிடித்துக் கொண்டு ஊரை சுற்றி பொழுதை கழித்து வரும் நாயகன் தான் செந்தூர் பாண்டியன். பேஸ் புக் தளத்தில் இருக்கும் பெண்களுக்கு மெசேஜ் அனுப்பி அவர்களை தனது வலைக்குள் விழ வைப்பது இவரது வழக்கம். அப்படியாக மாயவரத்தில் இருக்கும் நாயகி ப்ரீத்தி கரணுடன் பேஸ் புக் மூலமாக நட்பு ஏற்படுகிறது. ப்ரீத்தி கரணுக்கு பிறந்தநாள் என்பதால் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க தனது நண்பனுடன் பைக்கில் மதுரையில் இருந்து மாயவரத்திற்குச் செல்கிறார் செந்தூர் பாண்டியன். சென்ற இடத்தில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.


நாயகன் செந்தூர் பாண்டியன் மதுரை மண்ணின் உடல் மொழியை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். ஒரு சில இடங்களில் மூக்குடைக்கப்பட்டு நிற்கும் காட்சியாக இருக்கட்டும், தனது நண்பனுடன் யதார்த்தமாக பேசுவதாக இருக்கட்டும் என பல இடங்களில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். நாயகி ப்ரீத்தி கரண், சுரேஷ் மதியழகன் இருவரும் தங்கள் நடிப்புகளில் நன்றாகவே ஸ்கோர் செய்துள்ளனர்.


சிங்கிள் ஷாட்கள் காட்சியமைப்பை நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் உதய் தங்கவேல்.கிராம இளைஞர்கள் மத்தியில் நடக்கும் நிகழ்கால கடந்த கால நினைவுகளை பல இடங்களில் நினைவிற்கு கொண்டு வந்து சென்றிருக்கிறார் இயக்குனர் பிரசாத் ராமர்.


நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே – அடல்ட் காமெடி படங்கள் ரசிப்பவர்கள் கண்டிப்பாக பார்த்து ரசித்து விட்டு வரலாம்.

0 comments:

Pageviews