கார்டியன் திரை விமர்சனம்

 

சிறுவயதிலிருந்தே அதிர்ஷ்டம் இல்லாமல் வளரும் ஹன்சிகா வேலைக்காக சென்னை செல்கிறார். அப்போது அவருடைய வாழ்க்கையில் நிறைய சந்தோஷமான விஷயங்கள் நடக்கிறது, அதுமட்டுமில்லாமல் அவர் சொல்லும் விஷயங்கள் எல்லாம் அப்படியே நடக்கிறது. அதற்கு என்ன காரணம் என்று புரியாமல் இருந்து வரும் ஹன்சிகாவுக்கு ஒரு கட்டத்தில் அதன் காரணம் தெரிய வருகிறது. அதன் பிறகு அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.


படத்தின் மொத்த கதையை தனி ஒரு ஆளாக தாங்கி செல்கிறார் நாயகி ஹன்சிகா. தொடர்ந்து, பிரதீப் ராயன், சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி உள்ளிட்ட நட்ச்த்திரங்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அருமையாக நடித்துள்ளார்கள். அதேபோல் மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை ஆகியோரின் காமெடி ஓரளவுக்கு நம்மை சிரிக்க வைக்கிறது. சாம் சி எஸ் பின்னணி இசை படத்திற்கு பலம்.


வழக்கமான பழிக்கு பழி வாங்கும் கதை. இதில் ஆவியை இணைத்து கமர்சியலாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.கார்டியன் படத்தை ஒருமுறை ரசித்துவிட்டு வரலாம்.

0 comments:

Pageviews