அரிமாபட்டி சக்திவேல் திரைவிமர்சனம்
திருச்சி அருகே அருகே அரிமாபட்டி என்ற ஒரு கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்களுக்கென்று ஒரு கட்டுப்பாட்டை வழி வகுத்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் வசிக்கும் நாயகன் சக்திவேல் வேறு ஒரு ஜாதி பெண்ணை காதலிக்கிறான். இதற்கு பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்புக் தெரிவிக்கின்றனர். அதையும் மீறி நாயகன் சக்திவேல் நாயகியை வெளியூருக்கு கூட்டி சென்று மணமுடிக்கிறார். இதன் பிறகு கட்டுப்பாடோடு வாழ்ந்து வந்த கிராமத்து மக்கள் இவர்களது காதலை ஏற்று கொண்டார்களா? இதன் பிறகு என்ன என்ன பிரச்சனைகளை இவர்கள் சந்தித்தார்கள் என்பது தான் படத்தின் மீதி கதை.
நாயகன் பவன், சக்திவேலாக ஜொலித்திருக்கிறார். ஒரு சில இடங்களில் ஏற்றக் இறக்கமுமாக நடித்திருந்தாலும், பெரிதாக எந்த இடத்திலும் சறுக்காமல் சென்றிருக்கிறார். நாயகி மேகனா அழகாக தோன்றி காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். பல இடங்களில் அதிகமாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.
நாயகனின் அப்பாவாக வருகிறார் சார்லி. பெரும்பாலான படங்களைப்போலவே இதிலும், அப்பாவித்தனமான தோற்றம், பேச்சு, நடிப்பு. காதலுக்கு முழு எதிரியாக.. நாயகியின் அண்ணனான ஆக்ரோசமாக நடித்து உள்ளார் பிர்லா போஸ்.
இன்னமும் தமிழ்நாட்டில், மாற்று சாதியினரை திருமணம் செய்து கொண்டால் ஊருக்குள் விட மாட்டோம் என்ற மடப்போக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது. அவர்களுக்கு உரைக்கும் விதமாக கதைகளத்தை இன்னும் அழுத்தமாகவே கூறியிருந்திருக்கலாம்.
0 comments:
Post a Comment