J பேபி திரைவிமர்சனம்

 

ஜே பேபி இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கதைப்படி ஊர்வசிக்கு இரண்டு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள். அனைவருக்கும் திருமணம் செய்துவிட்டு ஒவ்வொருவர் வீட்டிலும் மாறி மாறி வாழ்ந்து வருகிறார். வயதான காரணத்தால் அடிக்கடி மறதி ஏற்பட்டு மற்றவர் வீட்டை பூட்டி விடுவது, யாரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி பிரச்சினையை கொண்டு வருவது, அடிக்கடி எதாவது வில்லங்கம் செய்வது என இருக்கிறார். இது அவரது மகன்கள் மற்றும் மகள்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இதனால் அவரை மனநல மருத்துவமனையில் சேர்த்து பார்த்துக் கொள்கின்றனர்‌. அங்கு இருப்பவர்களுடன் அன்பாக பழகுகிறார் ஊர்வசி. ஒருநாள் இவரை விட்டுவிட்டு மகன் மற்றும் மகள் வீட்டிக்கு சென்றுவிட இவர்களுக்கு தன்மீது பாசம் இல்லை என்று நினைத்து அங்கிருந்து கிளம்பி சென்றுவிடுகிறார். கிளம்பி சென்றவர் கொல்கத்தாவில் இருப்பதாக போலீஸ் உள்ளூர் போலீசுக்கு தகவல் தர தினேஷ் மற்றும் மாறன் இருவரும் ஊர்வசியை சென்று கூட்டி வருமாறு போலீசார் அனுப்புகின்றனர். ஆனால் அண்ணன் மாறன் மற்றும் தம்பி தினேஷ் இருவரும் ஒரு பிரச்சினையில் இருந்து பேசிக் கொள்வதே இல்லை. இப்படி இருக்கும் இருவரும் எப்படி மொழி தெரியாத ஊருக்கு சென்று தனது அம்மாவை அழைத்து வருகிறார்கள்? அவர் மீண்டும் பத்திரமாக இவர்களுடன் சேர்ந்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை.

தினேஷ் படம் முழுவதும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். சில காட்சிகளில் இன்னும் கொஞ்சம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருக்கலாம். அம்மாவை அடித்துவிட்டு பிறகு அதுநினைத்து அம்மாவிடம் அவர் பேசும் காட்சியில் இவரும் ஊர்வசியும் நம்மை கலங்கவைத்துள்ளனர்.

வீட்டில் இளைய மகன் கொஞ்சம் அனைத்து விஷயங்களிலும் முன் நின்று செய்வது சில அண்ணன்களுக்கு பிடிக்காது எதனால் ஏற்படும் தாழ்வுமனப்பான்மையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் லொள்ளு சபா மாறன். 

படத்திற்கு என்ன தேவையோ அதை ஊர்வசி செய்திருக்கிறார். ஊர்வசியின் நடிப்பு நம்மை இயல்பான வாழ்க்கைக்கு கொண்டு செல்கிறது.

இந்த கதையினை இயக்குனர் சுரேஷ் மாரி மிகச்சிறப்பாக இயக்கியுள்ளார்.

எளிமையான கதையாக இருந்தாலும் சுவாரசியமாக கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும் மொத்தத்தில் ஜே பேபி – நல்ல படம் 


0 comments:

Pageviews