பர்த் மார்க் விமர்சனம்

 

கணவன் மனைவியாக வருகின்றனர் ஷபீரும் மிர்னாவும்.. நிறை மாத கர்ப்பிணியான மிர்னாவிற்கு சுகப்பிரசவத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக கேரளா அருகேயுள்ள ஒரு மலைகிராமத்திற்கு மிர்னாவை அழைத்து வருகிறார் ஷபீர். இயற்கை முறையில் மிர்னாவிற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பிறக்க போகும் அந்த குழந்தை மேல் ஷபீருக்கு சந்தேகம் வருகிறது. இதையெல்லாம் மீறி குழந்தை பிறந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை 


கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிர்ணா- கர்ப்பிணி பெண்ணாகவே நடிப்பு தன் திறமையை நிரூபித்திருக்கிறார். டான்சிங் ரோஸாக ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் ஷபீர்- கதையின் நாயகனான டேனியல் கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.


ஒளிப்பதிவாளர் உதய் தங்கவேல் இயற்கை மற்றும் அந்த அறைக்குள் நடக்கும் பதிவினை சிறப்பாக படம்பிடித்து திரையில் ரசிக்கவைத்துள்ளார் உதய் தங்கவேல், படத்தொகுப்பாளர் இனியவன் பாண்டியன் தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார் .


படத்திற்கு விஷால் சந்திரசேகரின் இசை மிகப்பெரிய பலம். படத்தை எடுத்த விதத்துக்காகவே இயக்குநரை பாராட்டலாம். 

0 comments:

Pageviews