பைரி விமர்சனம்
நாகர்கோயிலில் நடக்கும் பந்தயத்தை மையமாகக் கொண்டு அந்த வட்டாரவழக்கு மொழியிலேயே கொடுக்கப்பட்டிருக்கும் படம் பைரி. நாயகன் சையத் மஜீத் புறா வளர்க்கிறார். அங்கு நடக்கும் புறாப்பந்தயங்களில் முறைகேடுகள் நடக்கின்றன.அதைத் தட்டிக்கேட்கிறார். அவருக்கும், அவரது நண்பர்களின் உயிருக்கும் ஆபத்து வருகிறது. அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதுதான் பைரி படத்தின் மீதிக் கதை
நாயகனாக நடித்திருக்கும் சையத் மஜித்தின் நடிப்பில் குறையில்லை. நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் விஜி சேகர், மகன் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் விதம் மிரட்டலாக இருப்பதோடு, கவனம் ஈர்க்கும் வகையிலும் இருக்கிறது. நாயகனின் நண்பராக நடித்திருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் ஜான்கிளாடி.எல்லோர் வாழ்விலும் இப்படி ஒரு நண்பர் கதாபாத்திரம் இருக்கும் என்பதைப் பிரதிபலித்திருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் வினுலாரன்ஸ், முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ரமேஷ் ஆறுமுகம் ஆகியோர் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.
அருண்ராஜின் இசையில் இரசிக்கும்படி அமைந்திருக்கிறது. பின்னணி இசையால் திரைக்கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறார். கதையாகப் பார்த்தால் வழக்கமான கதைதான் எனினும் திரைக்கதை, வசனங்கள் மற்றும் காட்சிப்படுத்தல்களில் மண்மணமும் வட்டார மொழியும் இரண்டறக் கலந்திருப்பது படத்தின் தன்மையை உயர்த்திக்காட்டுகிறது.
0 comments:
Post a Comment