‘வீரா' பாடல் வெளியீடு : நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் இறுதிப்போரைப் பற்றி ஒரு பாடல்

 

தொலைநோக்கு பார்வையாளரான அமிர்தராஜ் செல்வராஜால் உருவாக்கப்பட்ட காமிக் புத்தகமான "எண்ட்வார்ஸ்" தமிழ்த் தழுவலில் இருந்து ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட புதிய பாடல் "வீரா" வெளியீட்டை அறிவிப்பதில் குயின்ஸ்லாந்து ஸ்டுடியோஸ் மகிழ்ச்சியடைந்துள்ளது. “இறுதிப்போர்” எனும் பெயரில் வெளிவந்துள்ள இந்தத் தழுவலின் மையத்தில் இருக்கும் வீரத்தின் கதையை உயிர்ப்பித்து, பாடல் YouTube இல் வெளியாகிறது. இந்தப் பாடல் அண்மையில் நடந்த சென்னை காமிக் கான் நிகழ்வில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் சென்னை காமிக் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. 


பாடலாசிரியர் மதன் கார்க்கியால் எழுதப்பட்டு, ஜெரார்ட் ஃபெலிக்ஸின்  இசையமைப்பில் அமைக்கப்பட்ட “வீரா”, காமிக் புத்தகத்துகாக உருவாக்கப்பட ஒரு பாடலாகும். இது ஒரு போர்க்குரல், தமிழ்ப் பொழுதுபோக்கு நிலப்பரப்பில் ஒரு புதிய சூப்பர் ஹீரோவின் எழுச்சியைப் பற்றி பேசும் பாடல் இது. 


குயின்ஸ்லாந்து ஸ்டுடியோஸ் தயாரித்த “எண்ட்வார்ஸ்” எனும் காமிக் கதையைத் தமிழில் "இறுதிப்போர்” என்று தழுவி மதன் கார்க்கி எழுதியுள்ளார்.  அதன் கதைக்களம் மற்றும் தெளிவான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் கற்பனையை ஏற்கனவே கைப்பற்றியுள்ளது. இயக்குனர் விக்டர் ஜெயராஜின் படைப்புப் பார்வை இந்தத் திட்டத்தை உயிர்ப்பிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, சௌரப்பின் வண்ணமயமான ஓவியங்களும் பா ஸ்டுடியோவால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான பாடல் வீடியோவும், "வீரா" காதுகளுக்கும் கண்களுக்கும் விருந்தாக அமைந்த்துள்ளது. 


"வீரா" இப்போது YouTube இல் ஸ்ட்ரீமிங்கிற்கு கிடைக்கிறது. அந்த வகை ரசிகர்களும் இசை ஆர்வலர்களும் பாடலை அனுபவிக்க அழைக்கப்படுகிறார்கள். 


0 comments:

Pageviews