தூக்குதுரை விமர்சனம்

 

கதாநாயகி இனியா ஒரு அரச குடும்பத்தின் வம்சாவளியை சார்ந்தவர் அதே சமயம் ,யோகி பாபு ஊர் திருவிழாக்களில்  ப்ரொஜெக்டர் மூலம் இயக்கும் திரைப்பட ஆபரேட்டராகக் பணிபுரிந்து வருகிறார் ஜமீன்தார் பெண்ணான இனியா, யோகிபாபுவை காதலிக்கிறார். இதனால் கோபம் கொள்ளும் ஜமீன்தார் யோகி பாபுவை  கிணற்றில் வைத்து எரித்து விடுகிறார். இந்த கிணற்றில் அரச குடும்பத்தின் விலை உயர்ந்த கிரீடம் மாட்டி கொள்கிறது. இதை எடுக்க முயற்சி செய்பவர்களை யோகிபாபு பேயாக வந்து பயமுறுத்துகிறார். இந்த கீரிடம் அரச குடும்ப வம்சா வளியினருக்கு கிடைத்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.


யோகி பாபு வழக்கமான தனது நக்கலான வசனங்கள் மூலம் சிரிக்க வைக்கிறார். இனியா கொடுத்த கதாபாத்திரத்தை  சிறப்பாக செய்துள்ளார். பாலசரவணன், மகேஷ், செண்ட்ராயன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் கூட்டணி ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.


படத்தில் கிராபிக்ஸ் ஓரளவு நேர்த்தியாக வடிவமைத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு, கலை இயக்கம், படத் தொகுப்பு, பின்னணியிசை என அனைத்தும் உயர்தரம்.


எழுதி இயக்கியிருக்கும் டெனிஸ் மஞ்சுநாத், முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை வடிவமைத்திருந்தாலும், படத்தின் இறுதியில் குட்டி மெசஜை நகைச்சுவை பாணியில் சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார்.

0 comments:

Pageviews