முடக்கறுத்தான் விமர்சனம்

 

நாயகன் டாக்டர் வீரபாபு, மூலிகை வியாபாரம் செய்து வருவதோடு, ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பராமரித்து வருகிறார். அவருக்கும் நாயகி மஹானாவுக்கும் திருமணம் நிச்சயமாகிறது. திருமணம் தொடர்பான பணிகளுக்காக சென்னை செல்லும் டாக்டர் வீரபாபு, காணாமல் போன தனது உறவினரின் குழந்தையை தேடும் முயற்சியில் இறங்குகிறார். அப்போது குழந்தை கடத்தல் பின்னணியில் மிகப்பெரிய நெட்வொர்க் இருப்பதை கண்டுபிடிக்கும் டாக்டர் வீரபாபு, அவர்களை அழித்து அவர்களிடம் இருக்கும் குழந்தைகளை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை 


நாயகன் டாக்டர் வீரபாபு எந்த சினிமா பின்னணியும் இல்லாமல், படத்தின் நாயகனாக நடித்ததோடு படத்தை இயக்கி, எடிட்டிங் செய்ததற்கு அவரை பாராட்டலாம். நாயகியாக நடித்திருக்கும் மஹானா ஒரு சில காட்சிகளில் மட்டும் தலைக்காட்டுகிறார். வில்லனாக நடித்திருக்கும் சூப்பர் சுப்பராயன், இந்த வயதில் ஒரு ஸ்டண்ட் கலைஞரைப் போல் டூப் இல்லாமல் சண்டைக்காட்சியில் நடித்திருப்பது வியக்க வைக்கிறது. சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் வந்தாலும் மயில்சாமி வரும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. சாம்ஸ், காதல் சுகுமார், அம்பானி சங்கர் காமெடி சிரிக்க வைக்கிறது. 


நாயகன் டாக்டர் வீரபாபு நல்லதொரு வாய்ப்பு மற்றும் கதை கிடைத்தால் கண்டிப்பாக ஜொலிப்பார். 


0 comments:

Pageviews