சிங்கப்பூர் சலூன் விமர்சனம்

 

தங்கள் கிராமத்தில் சிங்கப்பூர் சலூன் வைத்திருக்கும் லால், அங்கிருக்கும் மக்களை தன் வித்தையால் முடி திருத்தம் செய்து அழகாக மாற்றுகிறார். இதை சிறு வயது முதலே நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும் ஆர்.ஜே. பாலாஜிக்கு தானும் ஒரு மிகப்பெரிய ஹேர் ஸ்டைலிஸ்டாக மாற வேண்டும் என எண்ணம் தோன்றுகிறது. இதற்காக முயற்சி செய்யும் அவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு படிப்படியாக முடி திருத்தம் செய்யும் கடைகளில் வேலை செய்து தொழிலைக் கற்றுக்கொண்டு பின் சொந்தமாக ஒரு சலூன் கடையை நகரத்தில் அமைக்கிறார். வாழ்க்கையில் எல்லாம் சரியாக போய்க்கொண்டிருக்க, புதிய சலூன் கடையும் அமைத்த ஆர்.ஜே. பாலாஜியின் கடை திறப்பதற்கு முன்பே சலூனை திறக்கவிடாமல் மிகப்பெரிய தடை ஏற்படுகிறது. அந்த தடைகளை உடைத்து வாழ்க்கையில் ஜெயித்தாரா? இல்லையா? என்பதே படத்தி மீதி கதை 


எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் தனக்கானதை சிறப்பாக செய்து முடிப்பவர் ஆர் ஜே பாலாஜி. இதிலும் அதை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். ஆர் ஜே பாலாஜி மற்றும் கிஷன் தாஸ் இருவரின் சிறு வயது கதாபாத்திரங்களாக நடித்தவர்கள் படத்திற்குள் நம்மை  சிரிக்க வைக்கிறார்கள். சத்யராஜ் படத்திற்கு மிகப்பெரும் பலம். சத்யராஜ், ரோபோ சங்கர் அடிக்கும் காமெடி கலாட்டாக்கள் படத்திற்கு பெரும் வலுவாக வந்து நிற்கிறது. முதல் பாதி அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது. படத்தின் முக்கிய கதாபாத்திரமாக வரும் லால் தனது அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்கிறார்.


விவேக் - மெர்வின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருக்கிறது. ஜாவேத் ரியாஸின் பின்னணி இசை அளவு. படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே, சாதாரணமாக பயணிக்கும் ஒரு கதையை எதிர்பார்ப்புடன் பயணிக்கும்படி காட்சிகளை தொகுத்திருக்கிறார். இயக்குநர் கோகுல், தனது பாணியில் படத்தை நகைச்சுவையாக நகர்த்தி சென்றாலும், தான் சொல்ல வந்த கருத்தையும் அழுத்தமாக பதிவு செய்திருப்பது பாராட்டும்படி இருக்கிறது.


முதல் பாதி நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லை. இரண்டாம் பாதி முழுக்க எமோஷனல். முதல் பாதியில் போரின் சீன் எதுவுமே இல்லை.குடும்ப ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடிக்கும்.

0 comments:

Pageviews