குஷி விமர்சனம்

 



பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் வேலை செய்பவர் விப்லவ்(விஜய் தேவரகொண்டா). மணிரத்னம் படத்தில் வருவது போன்று வாழ வேண்டும் என காஷ்மீருக்கு டிரான்ஸ்ஃபர் கேட்கிறார். மலைப் பிரதேசம், பனி படர்ந்த இடங்கள், ஏ.ஆர். ரஹ்மான் இசை, ரொமான்ஸ் என்று வாழ ஆசைப்படுகிறார் விப்லவ். ஆனால் அங்கு சென்ற பிறகு தான் சினிமா வேறு நிஜம் வேறு என்பது அவருக்கு புரிகிறது. ஒரு நாள் ஆராத்யாவை(சமந்தா) பார்த்ததும் விப்லவுக்கு காதல் ஏற்படுகிறது. அதன் பிறகு என்ன நடக்கும் என்பதை நீங்கள் பல படங்களில் பார்த்திருப்பீர்கள். ஆராத்யா யாராக இருந்தாலும் கவலை இல்லை என்று அவரை பின்தொடர்ந்து காதலிக்கிறார். அதை பார்த்து விப்லவ் மீது ஆராத்யாவுக்கு காதல் வந்துவிடுகிறது. அங்கு தான் உண்மையான பிரச்சனையே துவங்குகிறது. கடவுள் நம்பிக்கை இல்லாத லெனின் சத்யமின்(சச்சின் கெகேத்கர்) மகன் விப்லவ். கடவுள் பக்தி கொண்ட முக்கியமாக லெனினின் பரம எதிரியான ஸ்ரீவாஸ் ராவின்(முரள் சர்மா) மகள் ஆராத்யா. தங்கள் காதலால் எல்லாவற்றையும் சமாளித்துவிடலாம் என விப்லவும், ஆராத்யாவும் நினைக்கிறார்கள். ஆனால் காதல் மட்டும் போதுமா?. யார் உதவியும் இல்லாமல் விப்லவும், ஆராத்யாவும் தங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை தாண்டி உறவை காப்பார்களா? அப்படியே ஜாலியாக ஒரு படம் பார்க்க ஆசைப்படுபவர்களுக்கு ஏற்றது குஷி.


விப்லவாகவே மாறியிருக்கிறார் விஜய் தேவரகொண்டா. எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க விரும்பும் ஆராத்யாவாக வாழ்ந்திருக்கிறார் சமந்தா. காதல் காட்சிகளாகட்டும், சண்டை காட்சிகளாகட்டும் சிறப்பாக நடித்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா. எல்லாவற்றுக்கும் சேர்த்து கிளைமாக்ஸ் காட்சி திருப்திகரமாக இருக்கிறது. மைனஸ் பாயிண்டுகள் இருந்தாலும் நம்மை கவரும் படமாக இருக்கிறது குஷி. எதுவாக இருந்தாலும் காதல் போதும் என்கிற மெசேஜ் கொடுத்திருக்கிறார்கள்.

0 comments:

Pageviews