பரம்பொருள் விமர்சனம்
உடல்நிலை பிரச்சினை இருக்கும் சகோதரியின் மருத்துவ சிகிச்சைக்கு போதிய வசதி இல்லாத காரணத்தினால் அமிதாஷ் ஆதி என்ற கதாபாத்திரத்தில் சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்து வருகிறார். அப்படிதான் போலீஸ் அதிகாரியாக இருக்கும் சரத்குமாரின் வீட்டில் திருடும்போது கையும் களவுமாக மாட்டிக் கொள்கிறார். அப்போது அமிதாஷாவிடம் சரத்குமார் விசாரணை செய்யும்போது சிலை கடத்தல் குற்றவாளி ஒருவரிடம் இவர் வேலை செய்தது தெரிய வருகிறது. போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் மிகச் சீக்கிரம் பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் தான் இந்த படத்தில் சரத்குமார் நடித்திருக்கிறார். அந்த வகையில் அமிதாஷ் பற்றி தெரிந்தவுடன் ஒரு பழம்பெரும் சிலையை கடத்தி விற்க வேண்டும் என்று சரத்குமார் கூறுகிறார். அதற்கு ஆரம்பத்தில் அமிதாஷ் மறுத்தாலும் குடும்ப சூழ்நிலை மற்றும் சரத்குமார் கட்டாயத்தின் பேரில் இதை செய்ய முயற்சிக்கிறார். கடைசியில் அந்த சிலையை எப்படி கடத்துகிறார்கள், அதை விட்டார்களா என்பது தான் படத்தின் கதை.
மேலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் யாரும் எதிர்பார்க்காத விஷயத்தை இயக்குனர் வைத்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. சரத்குமார் கெட்ட போலீஸ் அதிகாரியாகவே வாழ்ந்திருக்கிறார். மைத்ரேயன் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் பவர்ஃபுல்லாக காட்டியிருக்கலாம். சரத்குமாரும் சரி, அமிதாஷ் பிரதானும் சரி அற்புதமாக நடித்திருக்கிறார்கள். அமிதாஷின் காதலியாக வந்திருக்கும் காஷ்மிரா தனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.
0 comments:
Post a Comment