கிக் விமர்சனம்
எம்ஜேவின் (தம்பி இராமையா) விளம்பர நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் சந்தோஷ் (சந்தானம்). விளம்பர ஆர்டர்கள் வாங்குவதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும் அளவுக்கு இருக்கும் சந்தோஷத்துக்கு நேர் எதிராக இருக்கிறார் நாயகி தன்யா ஹோப். நீதி, நேர்மை, நியாயம் என மனோபாலாவின் கம்பெனியில் இவர் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் கம்பெனிகளுக்கு இடையே விளம்பரம் பெறுவதில் போட்டா போட்டி நடக்கிறது. அந்த சமயத்தில் சந்தோஷ் கார் விளம்பரம் பெறுவதற்காக அதன் மார்க்கெட்டிங் ஹெட் செந்திலுக்கு முன் கவர்ச்சி நடிகையை டான்ஸ் ஆட வைக்கிறார். இதன் மூலம் அந்த விளம்பரத்தையும் பெற்று விடுகிறார். இதனிடையில் ஹீரோயின் தன்யாவை கண்டதும் சந்தானத்துக்கு காதல்.
சந்தோஷ் என்ற பெயரை மட்டுமே தெரிந்து கதாநாயகனை அடியோடு வெறுக்கிறார் நாயகி. இதனால் வேறு ஒரு பெயரில் தன்யாவுடன் பழகி காதலிக்கிறார். ஒருக்கட்டத்தில் உண்மை வெளிப்படும் தருணத்தில் தன்யா ஏமாற்றப்படுவது தெரிந்து மனமுடைகிறார். இப்படி படம் எங்கேங்கோ பயணித்து கிளைமேக்ஸ் நோக்கி செல்கிறது.
'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்தின் மிகப்பெரிய பலமாக சந்தானம் அன்ட் கோவை தான் அனைவரும் சொன்னார்கள். லொள்ளு சபா மாறன், சுவாமிநாதன், மிட்டாய் ராஜேந்திரன், மனோகர் என தனது டீமை வைத்து அதகளமாக காமெடியை கொடுத்து விடுவார் சந்தானம். ஆனால் இந்தப்படத்தில் தம்பி ராமையா, கோவை சரளா என புதிய முயற்சியாக இவர்களுடன் இணைந்துள்ளார் சந்தானம்.
ஆனால் சந்தானத்தின் சோதனை முயற்சி எந்த வகையிலும் கை கொடுக்கவில்லை என்பது தான் சோகம். நீண்ட இடைவேளைக்கு பிறகு செந்திலை திரையில் பார்த்த ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றம். அவருக்கு ஒரு பரிதாபமான கேமியோ ரோலை வழங்கியுள்ளனர். அத்துடன் மன்சூர் அலிகான், வையாபுரி, ஒய்.ஜி. மகேந்திரன், கிரேன் மனோகர் என படத்தில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இருந்தாலும், யாரும் நம்மை சிரிக்க வைக்கவில்லை.
0 comments:
Post a Comment