அஸ்வின்ஸ் விமர்சனம்

 

லண்டனில் ஒரு பெரிய மாளிகையில் ஆராய்ச்சிக்குப் போன ஆர்க்கியாலாஜி டிப்பார்ட்மெண்ட் லேடி ஆபீசர், தன் உதவியாளர்கள் 15 பேர்களை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறார். ஆனால் அப்படி சூசைட் செய்து கொண்ட ஆபிசர் உடல் மட்டும் மிஸ்ஸிங்.. அத்துடன் இரவானால் அந்தப் பங்களா செல்லும் வழியைச் சுற்றி கடல் சூழ்ந்து கொள்ளும். இப்படியான மர்ம பங்களாவையும், அங்கு நிகழும் மர்மங்களையும் ஒரு வீடியோ படமாக எடுத்து யூ ட்யூப்பில் பகிரும் நோக்கில் நாயகன் வசந்த் ரவி, சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகிய ஐந்து பேரும் இந்தியாவில் இருந்து லண்டன் செல்கிறார்கள். அப்போது அவர்கள் எதிர்கொள்ளும் திக்,, திக் சம்பவங்களின் கோர்வையே ‘அஸ்வின்ஸ்’.


மெயின் கேரக்டரின் வரும் வசந்த் ரவி, நடிப்பில் நன்றாகவே தேறி இருக்கிறார்.. பயம் கலந்த கண்களில் வழியாகக் கூட படம் பார்ப்பவர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்துகிறார் என்பதுதான் விசேஷம். அதிலும் படத்தின் பெருபங்கை இவரே சமாளித்து சபாஷ் எல்லாம் வாங்குகிறார்.. சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருந்தாலும், பயப்படுவதை மட்டுமே படம் முழுவதும் செய்திருக்கிறார்கள். ஆர்கியாலஜி ஆபீசர் ரோலில் வரும் விமலா ராமன், மிரட்ட முயற்சித்திருக்கிறார்.


மியூசிக் டைரக்டர் விஜய் சித்தார்த். சின்னச் சின்ன காட்சிகளுக்கும் தேவையான ஒலிகளை வழங்கி படத்தின் தரத்தை உயர்த்தி விட்டார். கூடவே சவுண்ட் டிசைனர்களான சச்சின் & ஹரி கை வண்ணத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் படம் ஹாலிவுட் படமோ என்று எண்ண வைத்து விட்டார்கள்.


கேமராமேன் எட்வின் சகாய் அஸ்வின்ஸ் படத்தின் இன்னொரு ஹீரோதான். படம் முழுவதையும் இருட்டில் படமாக்கினாலும், சரியான வெளிச்சத்தை பயன்படுத்தி கடல் நடுவே சில மணி நேரங்கள் பாதை உருவாகும் அந்தப் பாதையை படம் எடுத்து இருப்பதெல்லாம் வேறலெவேல்.


ஒரு தமிழ் படம் ஹாலிவுட் மூவி  பார்க்கும் அனுபவத்தைக் கொடுத்து விடுகிறது.

0 comments:

Pageviews