இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ’பார்க்கிங்’
குடும்ப பார்வையாளர்கள் மற்றும் இளைஞர்களின் மிகவும் விரும்பப்படும் நடிகராக மாறியுள்ள நடிகர் ஹரிஷ் கல்யாண், தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார். அவரது அடுத்து வரவிருக்கும் திரைப்படங்கள் மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருந்தாலும், ’பார்க்கிங்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே சினிமா மற்றும் வர்த்தக வட்டாரத்தில் நேர்மறையான பேச்சை உருவாக்கியுள்ளது. திட்டமிட்டபடி கச்சிதமாக உருவாகி வரும் இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
திரில்லர் ட்ராமாவான ’பார்க்கிங்’ திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி கே.எஸ்.சினிஷ் (’பலூன்’ பட இயக்குநர் மற்றும் தெலுங்கில் ’டிக்கிலூனா’ மற்றும் ’விவாஹா போஜனம்பு’ ஆகியவற்றின் தயாரிப்பாளர்) பேஷன் ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரிக்கிறார். ராம்குமார் பாலகிருஷ்ணன் முன்பு ‘பலூன்’ படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் இந்துஜா நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு நிறைவடைகிறது.
சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் (எடிட்டிங்), என்கே ராகுல் (கலை), டி முருகேசன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), தினேஷ் காசி, பீனிக்ஸ் பிரபு (சண்டைப் பயிற்சி), ஷேர் அலி (ஆடைகள்), அப்சர் (நடன இயக்குநர்), யுகபாரதி (பாடல் வரிகள்), DTM (VFX), ராஜகிருஷ்ணன் M.R. (ஒலி கலவை), சிங்க் சினிமா (ஒலி வடிவமைப்பு), Yellowtooths (வடிவமைப்பு), ராஜேந்திரன் (படங்கள்), சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.
0 comments:
Post a Comment