தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் பாலாஜி அவர்கள் திரைக்கதை, வசனம் எழுதி, நடித்து, இயக்கி, தயாரித்த ஜம்பு மஹாரிஷி திரைப்படம் வெளியிடப்பட்டது
இன்று திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் பாலாஜி அவர்கள் திரைக்கதை, வசனம் எழுதி, நடித்து, இயக்கி, தயாரித்த ஜம்பு மஹாரிஷி திரைப்படம் வெளியிடப்பட்டது. முதல் காட்சியை ஜம்பு மஹாரிஷி பேரவை நிர்வாகிகளோடு பல்வேறு சமூதாய சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் C.R பாஸ்கரன் & P.அன்பரசன் ஆகியோர்கள் பார்வையிட்டனர். பொதுவாக நாங்கள் திரைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த படத்தை பாருங்கள், இந்த படத்தை பாருங்கள் என்று விளம்பப்படுத்து வதில்லை.
ஏதோ ஒரு போட்டோவை படத்தில் காண்பித்து அதை வாமா மின்னல் என்று படத்தில் வரவைத்து, இது சமூதாய படம் என்று பிரச்சாரம் செய்து, மேலும் பல்வேறு சமூதாயங்க ளிடையே பீதியையும், பரபரப்பை உறுவாக்கி, பூதாகாரப்படுத்தி, பல்வேறு குழுக்களை தயார் செய்து சமூதாய மக்களிடையே நிதிகொடு, பேனர் வை, படத்தைப்பார், போஸ்டர் ஒட்டுனு பிரச்சாரம் செய்து வணிகமாக்கி பணம் கொழிக்கும் தயாரிப்பாளர்/இயக்குநர் இருக்கும் சமுதாயத்தில்
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, விவசாயியாக வாழ்ந்து யாரிடமும் கையேந்தாமல், 14 வருடங்களாக போராடி, யாரின் உதவியில்லாமல், சமுதாய மக்களிடையே சுயவிளம்பரம் செய்யாமல், யாரின் ஆதர மற்றும் தயவுமில்லாமல், சமூதாயத்தை பெருமை படுத்தும் வகையில் ஜம்பு மஹாரிஷியின் வரலாற்றை திரைப்படமாக எடுத்து வெளியிட்ட பாலாஜியை பாராட்டவேண்டும்.
படத்தின் முதல் பாகம் விவசாயத்தின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையிலும் இந்திய விவசாயத்தை கெடுக்க நினைக்கும் வெள்ளையரோடு இணைந்து செயல்படுகின்றவரை அழித்து இந்திய விளைநிலங்களை காப்பதாக படம் அமைந்துள்து.
இரண்டாவது பாதி ஜம்பு மஹாரிஷி வரலாறு, யாகம் செய்தல், அதில் தோன்றிய ருத்ரவீரன், வாதாபியை அழித்து இந்த உலகத்தை காப்பதாக எடுக்கப்பட்டுள்ளது. கடைசியாக இரண்டையும் இணைத்து ஜம்பு மஹாரிஷியின் ஆசியோடு விவசாயிகளுக்கெதிரான நவீன கயவர்களை அழிப்பதாக படம் அமைந்துள்ளது.
சுயவிளம்பரமில்லாத பாலாஜியை பாராட்டுகிறோம்.
ஜம்புமஹாரிஷி படம் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகிறோம்.
இங்ஙனம்
ஜம்பு மஹாரிஷி பேரவை
0 comments:
Post a Comment