மீண்டும் புதிய சாதனை படைத்திருக்கும் ராம்சரண்- உபாசனா தம்பதிகள்
வேனிட்டி ஃபேர் எனும் சர்வதேச அளவில் பிரபலமான யூடியூப் சேனலில் ஆஸ்கார் விருதினை பெறுவதற்காக நட்சத்திர தம்பதிகளான ராம்சரண்- உபாசனா, தங்கி இருந்த அறையில் தயாராகும் காணொளி வெளியானது. இந்த காணொளி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்திருக்கிறது.
உலகம் முழுவதும் மில்லியன் கணக்கிலான ரசிகர்களை வசப்படுத்தி இருக்கும் முன்னணி இந்திய நட்சத்திரமான ராம்சரண் தொடர்பான பிரத்யேக காணொளி, வேனிட்டி ஃபேர் என்னும் யூட்யூப் சேனலில் வெளியானது. 'ஆர். ஆர். ஆர்' நட்சத்திர நடிகர் ராம்சரண் ஆஸ்கார் விருதுக்கு தயாராகிறார்' என்ற பெயரில் வெளியான இந்த காணொளி, ஆறரை மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு புதிய சாதனை படைத்திருக்கிறது. இதுவரை இந்த வேனிட்டி ஃபேர் எனும் யூட்யூப் சேனலில் அதிகம் பார்வையிடப்பட்ட காணொளி என்ற சாதனையும் படைத்திருக்கிறது.
உலகளவில் ரசிகர்களை பெற்றிருப்பதால் உலக நட்சத்திரமாக ஜொலிக்கும் ராம்சரண் மற்றும் அவரது அன்பும் அழகும் நிறைந்த மனைவி உபாசனா என இருவரும் வாழ்க்கையின் மிக சிறப்பு வாய்ந்த நாட்களில் ஒன்றான ஆஸ்கார் விருதிற்கு கலந்து கொள்ளும் தருணங்கள்...இந்த காணொளியில் இடம் பிடித்திருக்கிறது. ஆஸ்கார் விருது நிகழ்வில் அவரது நடிப்பில் வெளியான 'ஆர் ஆர் ஆர்' திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபலமான 'நாட்டு நாட்டு ..' எனும் பாடலுக்காக ஆஸ்கார் விருதினை வென்றது.
அந்த காணொளி... அறை ஒன்றில் உபாசனா மீது வாசனை திரவியத்தை ராம் சரண் தெளிக்கும் காட்சியுடன் தொடங்குகிறது. தொடர்ந்து அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்து உரையாடிக் கொள்ளும் தருணங்கள் இயல்பான த்வொனியில் அமைந்திருக்கிறது. அவர்களது தங்கும் இடங்களை நாமும் சுற்றிப் பார்க்கிறோம். அங்கு அவர் தங்களது ஆற்றலுக்கான சிறிய மத அடையாளங்களை காண்பிக்கிறார். அது அவர்களது வலுவான நம்பிக்கைகளுக்கு சான்றாக இருக்கிறது. ராம் சரண் தயாராகி இருக்கும்போது... அவரது வசீகரமும், சாதுர்யமும் முழுமையாக காட்சியளிக்கிறது. அவரது இந்த தோற்றம்.., அவர் மீது நமது பேரன்பை மேலும் வெளிப்படுத்துகிறது. இதனிடையே உபாசனா தனது பாரம்பரிய ஆடையான சேலையை நேர்த்தியாக உடுத்திக் கொண்டு, சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனைகளை மேற்கொள்வதாக காண்பிக்கப்படுகிறது.
இருவரும் அவர்களது அறைகளிலிருந்து வெளியே வரும்போது... சிவப்பு கம்பளம் தயாரான நிலையில்... யாரும் தவறவிட முடியாத அற்புதமான தருணங்களை.. ஆசி பெற்ற பிறகு.. சிறப்பு மிக்க வரலாற்றை உருவாக்குகிறார்கள்.
இந்த காணொளியின் வெற்றி, ராம்சரண் அபரிமிதமான புகழ் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை மீது ரசிகர்கள் காட்டும் ஈர்ப்பிற்கு சான்றாகும். மில்லியன் கணக்கிலான பார்வைகளை கடந்திருப்பது அவரது நட்சத்திர பிம்பத்தின் மீதான ஆற்றலுக்கும், கவர்ச்சிக்கும் எல்லையே இல்லை என்பது உறுதியாக்குகிறது. ராம்சரண் தொடர்ந்து பொழுதுபோக்கு துறையில் பல தடைகளை உடைத்து புதிய சாதனைகளை படைத்து வருகிறார். ஆடை அலங்கார கலைமீது ராம் சரண் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன் கூடிய ஈடுபாடு, அவரது இயல்பான வசீகரம் மற்றும் அழகும் இணைந்து தனித்துவமான ஆற்றல் உடையவர் என அடையாளப்படுத்துகிறது. உலகளாவிய பார்வையாளர்களை தொடர்ந்து கவர்ந்து வருவதால்.., அவருடைய அடுத்த கட்ட முயற்சி குறித்த எதிர்பார்ப்பு நீடிக்கிறது. அவருடைய புதிய பதிவுகளுக்காக பலரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ராம்சரனும், அவரது மனைவி உபாசானவும் எதிர்கால முயற்சிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற வாழ்த்துக்களுடன்.. காணொளி நிறைவடைகிறது.
0 comments:
Post a Comment