மீண்டும் இணையும் சூப்பர் ஹிட் கூட்டணி! பிரமாண்டமாக நடைபெற்ற ஆண்டனி படத்தின் பூஜை

ஜோஷி-ஜோஜு ஜார்ஜ் மீண்டும் இணையும் "ஆண்டனி" படத்தின் பூஜை இன்று கொச்சி கிரவுன் பிளாசாவில் விமர்சையாக நடைபெற்றது.
சுரேஷ் கோபி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன பாப்பன் படத்திற்கு பிறகு ஜோஷி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ஆண்டனி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஜோஷி இயக்கிய “பொரிஞ்சு மரியம் ஜோஸ்” படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த ஜோஜு ஜார்ஜ், நைலா உஷா, செம்பன் வினோத் ஜோஸ், விஜயராகவன் போன்றோர்கள்தான் இந்த “ஆண்டனி” படத்திலும் நடிக்கவுள்ளனர். இது இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு. 
இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் ஆஷா சரத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜோஜு ஜார்ஜ், ஜோஷி கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் தான் "பொரிஞ்சு மரியம் ஜோஸ்". கட்டாளன் பொரிஞ்சு என்ற கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மீண்டும், ஜோஷி மற்றும் ஜோஜு ஜார்ஜ் ஜோடி எதிர்பார்ப்புகளை இரட்டிப்பாக்கியது. இரட்டா படத்திற்கு பிறகு ஜோஜு ஹீரோவாக நடிக்கிறார்.
இப்படத்தை ஐன்ஸ்டீன் மீடியா நிறுவனம் சார்பில் ஐன்ஸ்டீன் சேக் பால் தயாரித்துள்ளார். படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா மற்றும் பூஜை விழா கொச்சி கிரவுன் பிளாசா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த படத்தின் கதையை ராஜேஷ் வர்மா எழுத, ஒளிப்பதிவு ரணதிவே செய்கிறார். படத்தொகுப்பு ஷ்யாம் சசிதரன், இசை ஜேக்ஸ் பிஜோய்,  கலை இயக்கம் திலீப்நாத், ஆடை வடிவமைப்பு பிரவீன் வர்மா ஆகியோர் பணியாற்ற உள்ளனர்.

0 comments:

Pageviews