சகுந்தலம் விமர்சனம்

 

விஸ்வமித்ரன் மற்றும் மேனகைக்கு பிறந்த குழந்தையான சகுந்தலாவை மேனகை ஒரு ஆசிரமத்தில் விட்டுவிட்டு செல்கிறார். ஆசிரமத்தில் வாழ்ந்துவரும் சகுந்தலா மீது நாட்டின் ராஜாவான துஷ்யந்தாவிற்கு காதல் ஏற்படுகிறது, அடிக்கடி ரகசியமாக ராஜாவும் சகுந்தலாவும் சந்திக்கின்றனர், பிறகு இருவரும் சகசியமாக திருமணம் செய்துகொள்கின்றனர் ,பிறகு சகுந்தலாவும் கர்பம் ஆகிறாள் அப்போது ராஜா சகுந்தலாவை சீக்கிரம் அரண்மனைக்குள் அழைத்துச்செல்வதாக சொல்லிவிட்டு செல்கிறார். இதற்கிடையில் துருவாசா மகரிஷி என்ற முனிவர் சகுந்தலாவிற்கு மிகப்பெரிய சாபத்தை கொடுக்கிறார். மற்றும் தன்னை மதிக்காததற்காக ராஜாவிற்கு சகுந்தலா பற்றிய நியாபகம் இல்லாமல் செய்துவிடுகிறார். கடைசியில் சகுந்தலா பற்றிய நியாபகம் ராஜாவிற்கு வந்ததா ? இல்லையா ? என்பதும் சகுந்தலா துஷ்யந்தா ராஜாவை சேர்ந்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை.


சகுந்தலையாக சமந்தா. பட்டாம்பூச்சிகளும் பூக்களும் சூழ இன்ட்ரோ கொடுத்து, புலி, மயில், மான், முயல், மரங்கள் என அனைத்துடனும் நட்பு கொண்டு, வனத்தில் ஓடியாடி துஷ்யந்தனுடன் சேர்ந்து நம்மையும் காதலில் விழ வைக்கிறார் சமந்தா.


இரண்டாம் பாதியில் துயரம், விரக்தி, கோபம் என அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி காண்போரை படத்துடன் ஒன்ற வைக்கிறார். க்ளோஸ் அப் காட்சிகளிலும் 60களின் கதாநாயகிகள் போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி சமந்தா அட்டகாசமாக ஸ்கோர் செய்துள்ளார்.


சகுந்தலையைக் கண்டதும் காதலில் விழும் துஷ்யந்தனாக தேவ் மோகன். சூஃபியாக நம்மைக் கவர்ந்த தேவ் மோகனின் அடுத்த படம் இது. துஷ்யந்த மகாராஜா கதாபாத்திரத்தில் பொருந்திப் போய் இருக்கிறார்.  


மணிசர்மா இசையில் பாடல்கள் கவனம் ஈர்க்கின்றன, பின்னணி இசை தொலைக்காட்சி நாடகம் பார்க்கும் உணர்வைத் தருகிறது. புராணக்கதையை முதல் பாதியில் சற்று சுவாரஸ்யமாகவே கடத்தியிருக்கிறார்கள், குறிப்பாக காதல் காட்சிகள், சமந்தா – தேவ் மோகன் இடையேயான கெமிஸ்ட்ரி ஆகியவை படத்துக்கு வலு சேர்க்கின்றன.





0 comments:

Pageviews