விஜயானந்த விமர்சனம்

 

கர்நாடகத்தின் பிரபல அரசியல் பிரமுகர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கைக் கதை.  ஆரம்பத்தில், தந்தையின் அச்சக தொழிலில் ஈடுபட்டவர், பிறகு, வி.ஆர்.எல். எனும் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை உருவாக்கினார். ஒரு லாரியுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், விஜய் சங்கேஸ்வரின் திறமையினால்  ஆயிரக்கணக்கான வாகனங்களாக பெருகியது. பிறகு நாளிதழ் துவங்கினார், அரசியலில் ஈடுபட்டு எம்.பி. ஆனார்.


இப்படி பன்முகம் கொண்டவராக  விளங்கும் விஜய் சங்கேஸ்வருக்கு பத்மஸ்ரீ விருதும் அளிக்கப்பட்டது. இவரது வாழ்க்கைக் கதை, அவரது மகன்  ஆனந்த் சங்கேஸ்வர் தயாரித்து இருக்கிறார். ரிஷிகா ஷர்மா இயக்கியுள்ளார்.


நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஸ்ரீலதா பிரகலாத், பரத் போப்பண்ணா, அனந்த் நாக், வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். 


நாயகன் என்றால் அதிரடி சாகசஙகள் செய்ய வேண்டும் என்கிற சினிமா விதியை உதறித் தள்ளியிருக்கிறது இந்த அற்புத திரைப்படம்.


நடுத்தர குடும்பத்தில் பிறந்த நாயகன், குடும்பத் தொழிலான அச்சகத்தை விட்டு, புதிதாக லாரி பிஸினஸில் இறங்குகிறார். வீட்டினர் எதிர்த்தாலும் அதில் உறுதியாக இருக்கிறார். மார்க்கெட்டில் ஏற்கெனவே லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தும் சிலர், இவருக்கு எதிராக இருக்கின்றனர். அவர்களை மீறி வளர்கிறார் நாயகன்.


அடுத்து நாளிதழ் துவங்குகிறார். அந்தத் தொழிலில் இருக்கும் முக்கிய நபர்களின் எதிர்ப்பை சம்பாதிக்கிறார். ஆனால் அதிலும் தனது உழைப்பால் வெற்றி பெறுகிறார். இடையில் அரசியலில் நுழைந்து எம்.பி. ஆகிறார்.


இப்படி எதார்த்தாமாக.. ஆனால் சுவையாக எடுக்கப்பட்டு இருக்கிறது திரைப்படம்.


நிஜக் கதை என்பதால், உழைப்பால் உயரலாம் என்கிற எண்ணத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்துகிறது.


சிறப்பான படம்.

0 comments:

Pageviews