வரலாறு முக்கியம் விமர்சனம்

 

கோவையில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தந்தை கே.எஸ். ரவிக்குமார் மற்றும் அம்மா சரண்யா பொன்வண்ணனுடன் வசித்து வருகிறார் ஜீவா. அதே தெருவில் கேரளாவில் இருந்து அக்கா தங்கை காஷ்மிரா மற்றும் பிரக்யா குடும்பத்துடன் குடி வருகின்றனர். காஷ்மீரின் அப்பா தனது மகளை துபாய் மாப்பிள்ளைக்கு மட்டுமே கட்டிக் கொடுப்பேன் என உறுதியுடன் இருக்கிறார். ஜீவா காஷ்மிராவை ஒருதலையாக காதலித்து பிறகு ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அதன்பின்னர் என்ன ஆனது? கடைசியில் இருவரும் இணைந்தார்களா என்பதை கலகலப்புடன் ஜாலியாக சொல்லி இருக்கும் படம் தான் வரலாறு முக்கியம்.


பக்கத்து வீட்டு பையன் போல இருக்கும் “ஜீவா”வின் தோற்றம் இக்கேரக்டருக்கு பக்காவாக பொருந்தியிருக்கிறது. 'சிவா மனசுல சக்தி' படத்திற்கு பிறகு முழு நீள காமெடியில் இந்தப்படத்தில் கலக்கியுள்ளார் ஜீவா. அவருக்கு ஜோடியாக வரும் காஷ்மீராவும் அழகாக இருப்பதுடன் மட்டுமல்லாமல் நடிக்கவும் செய்துள்ளார்.


மேலும் கே.எஸ். ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன் தங்களது சீனியர் நடிப்பை படத்திற்கு தேவையான அளவு கொடுத்துள்ளனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு வி.டி.வி கணேஷும் காமெடியில் கலக்கியுள்ளார். ஏற்கனவே பார்த்து பழக்கப்பட்ட கதை என்றாலும் காமெடி காட்சிகளால் போர் அடிக்காத பொழுதுபோக்கு படமாக இருக்கிறது. அனைவரும் பார்த்து ரசித்து விட்டு வரலாம்.

0 comments:

Pageviews