டார்க் ஜெயிண்ட் திரை விமர்சனம்

 

கிராமத்தில் வறுமையில் வாடும் அயலி மதன் ஒரு வேளை   உணவு கூட இல்லாமல் கஷ்டப்படுகிறார். அவரை பார்க்கும் சாமியார் ஒருவர் ஊருக்கு ஒதுக்கு புறத்தில் இருக்கும் சாத்தன் கற்சிலையை  வழிபட்டால் உனக்கு வேண்டியது கிடைக்கும் என்று கூறுகிறார்.  


இந்நிலையில் அந்த சாத்தான் கற்சிலையை மதன் வழிபட நெல் மூட்டை கிடைக்கிறது. இதையடுத்து மதன் வசதியாக வாழ செல்வத்தை கொடுக்க சொல்ல அதற்கு அந்த சாத்தன் கற்சிலை  குழந்தையை பலி கேட்கிறது. இதனால் குழப்பம் அடையும் மதன் சாமியாரை தேடி செல்ல அந்த சாமியார் சாத்தனிடம் செல்ல வேண்டாம் என்று கூறுகிறார் . மீறி சென்றால் உன் வம்சமே அழிந்துவிடும் என்று கூறுகிறார்.


இதையடுத்து  பல வருடங்களுக்குப் பிறகு சென்னையில் வசிக்கும் ஆதர்ஷ் மனைவி ஜோவிட்டா மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் பலரிடம் கடன் வாங்கி அதை திரும்பிச் செலுத்த முடியாமல் கஷ்டப்படுகிறார். இவருடைய நெருங்கிய நண்பரான அமுதவாணன் கடனை கேட்டு வர சில நாட்களில் தருவதாக கூறுகிறார்.


இந்நிலையில் கிராமத்தில் இருக்கும் அப்பா வழித் தாத்தா உடல்நிலை முடியாமல் இருப்பதாகவும் சொத்துக்கள் அனைத்தையும் பேரன்  ஆதர்ஷ்  மீது எழுதி வைக்க ஆசைப்படுவதாக கூறி அந்த வீட்டில் வேலை செய்யும் செந்தில் என்பவர் கூறுகிறார்.


இதனையடுத்து ஆதர்ஷ் தனது குடும்பத்தோடு கிராமத்தில் இருக்கும் பெரிய வீட்டிற்கு செல்கிறார். அங்கு சென்றதும் நாயகி ஜோவிட்டா கர்ப்பம் அடைகிறார். சில நாட்கள் அந்த வீட்டில் தங்க  பல அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது.   இதே சமயம் ஆதர்சை தேடி கிராமத்திற்கு வரும் அமுதவாணன் காணாமல் போகிறார்.


இந்நிலையில் சாத்தனிடம் நாயகி ஜோவிட்டாவை நரபலி கொடுக்க தாத்தா நினைக்கிறார். இறுதியில் நாயகி ஜோவிட்டாவை நரபலி கொடுப்பதில் இருந்து ஆதர்ஷ் காப்பாற்றினாரா? இல்லையா?  காணாமல் போன அமுதவாணம்  கிடைத்தாரா ? இல்லையா ? என்பதே ‘டார்க் ஜெயிண்ட்’   படத்தின் மீதிக்கதை.


கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதர்ஷ்  இயல்பான நடிப்பால் கவர்கிறார். மனைவி மீது காட்டும் பாசம், தங்கை மீது காட்டும் அக்கறை நரபலியை தடுக்க எடுக்கும் முயற்சிகள் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.


இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருக்கும் சோனியா அகர்வால் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய  பலமாக உள்ளது. சோனியா அகர்வால் கணவராக நடித்திருக்கும்  மதன் எதார்த்த நடிப்பால் கவர்கிறார்.


நாயகியாக வரும்  ஜோவிட்டா கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.  ஆதர்ஷ்  தங்கையாக வருபவர் அளவான நடிப்பால்  கவர்கிறார்.  இன்ஸ்பெக்டராக வருபவர்,  சாமியாக வரும் லிவிங்ஸ்டன், குருசாமியாக வரும் கே.பாக்யராஜ் என படத்தில் நடித்த  அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் விக்னேஷ் ராஜாவின் பின்னணி இசை கவனிக்கும் விதத்தில் இருக்கிறது. சங்கீத் மணிகோபாலின் ஒளிப்பதிவு கதை ஓட்டத்திற்கு துணை நிற்கிறது.


சாத்தன் வழிபாட்டால் ஒரு குடும்பம் எப்படி எல்லாம் பதிக்குள்ளாகிறது என்பதை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கி இருக்கும்  இயக்குநர் கே.எஸ். கிஷன் இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை சஸ்பென்ஸ் , ஹாரர்,  திரில்லர் கலந்து விறுவிறுப்பான திரைப்படத்தை கொடுத்த இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

0 comments:

Pageviews