இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' திரைப்படத்தின் முதல் பாடல் 'ராசாதி ராசா' வெளியீடு

 

பல வெற்றிப் படங்கள் மற்றும் இணையத் தொடர் தயாரித்து தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றிருக்கும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 'அகிலன்' மற்றும் 'பிரதர்' திரைப்படங்களுக்கு பிறகு 'கராத்தே பாபு' திரைப்படத்திற்காக  மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்துள்ளது.. 


சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்கும் பரபரப்பான அரசியல் கதையான 'கராத்தே பாபு' படத்தை 'டாடா' வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். ரவி மோகனின் 34-வது படமாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடலான 'ராசாதி ராசா' இன்று வெளியிடப்பட்டது.

'கராத்தே பாபு' படத்தின் இசை உரிமையை வாங்கியுள்ள சோனி மியூசிக் நிறுவனம் சாம் சி.எஸ். இசையில், மீனாட்சி இளையராஜா பாடல் வரிகள் மற்றும் குரலில் உருவாகியுள்ள 'ராசாதி ராசா' பாடலை வெளியிட்டுள்ளது. அழுத்தமான அரசியல் பாடலாக இது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இப்படத்தின் இதர பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு, திரைப்படம் வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.   


தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாகும் இப்படத்தில், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 


படம் குறித்து பேசிய இயக்குநர் கணேஷ் கே பாபு, "அரசியல்வாதிகள் குறித்து எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உறவுகள் மற்றும் உணர்வுகள் குறித்து பெரிதாக திரையில் பேசப்படவில்லை. இந்த திரைப்படம் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் இன்னொரு பக்கம் குறித்து அலசுகிறது. உணர்வுப்பூர்வமான அரசியல் திரில்லராக 'கராத்தே பாபு' உருவாகி உள்ளது," என்று தெரிவித்தார்.

படக்குழுவினர்


இசை - சாம் சி எஸ்


ஒளிப்பதிவு - எழில் அரசு கே 


படத்தொகுப்பு - கதிரேஷ் அழகேசன் 


தயாரிப்பு வடிவமைப்பு - சண்முகராஜா


இதர நடிகர்கள்: நடிகர்கள்: வி.டி.வி கணேஷ், சுப்ரமணியம் சிவா, கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, ராஜா ராணி பாண்டியன், இலன், சாம் ஆண்டர்சன், ஸ்ரீ தன்யா, சந்தீப் ரவி ராஜ், ஆனந்தி, சிந்து பிரியா, அஜித் கோஷ், கல்கி ராஜா, நைஃப் நரேன், வெற்றி, அரவிந்த், தர்மராஜ், நந்தினி செந்தமிழன், ஜீவா சுப்ரமணியம், மணிமேகலா


இணை எழுத்தாளர்கள்: ரத்ன குமார், பாக்கியம் சங்கர்


சண்டை பயிற்சி: திலிப் சுப்பராயன்


ஒலி வடிவமைப்பாளர்: அருணாச்சலம் சிவலிங்கம்


நடன இயக்குநர்: சதீஷ் கிருஷ்ணன்


ஆடை வடிவமைப்பாளர்: காயத்ரி பாலசுப்ரமணியன்


தயாரிப்பு நிர்வாகி: கார்த்திக் ஆனந்த்கிருஷ்ணன்


நிர்வாகத் தயாரிப்பாளர்: கே.எஸ். செந்தில் குமார்


விநியோகத் தலைவர்: கிரண் குமார் எஸ்


கோ டைரக்டர்: எஸ் ஏ பாஸ்கரன்


தயாரிப்பு: சுந்தர் ஆறுமுகம்


கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: கணேஷ் கே பாபு

0 comments:

Pageviews