ஹபீபி திரை விமர்சனம்

 

1980 ஆம் காலகட்டத்தில் கடையநல்லூர் பகுதியில் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த கஸ்தூரி ராஜா நெசவுத் தொழில் செய்கிறார் இவருடன் இவரது தம்பியும் இதே வேலை செய்து வருகிறார். கூட்டு குடும்பமாக வாழும் இவர்களின் குடும்பத்திற்கான பொருளாதார தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனையடுத்து கஸ்தூரிராஜா தம்பி வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்கிறார். கஸ்துரிராஜாவின் மகன் ஈஷா, தன்னுடன் படிக்கும் மாணவி மாளவிகாவை காதலிக்கிறார். ஒரு நாள் இரவு மாளவிகாவை  பார்ப்பதற்காக ஈசா அவரது  வீட்டிற்கு செல்ல ஊர் மக்கள் பிடித்து  பஞ்சாயத்தில் நிற்க வைக்கிறார்கள். இறுதியில் ஈஷா, மாளவிகா காதல் கைக் கூடியதா ? இல்லையா? குடும்பத்தை காப்பாற்ற வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றாரா ?  இல்லையா ?  என்பதே படத்தின் மீதிக்கதை.


நெசவாளர் கதாபாத்திரத்தில் கஸ்தூரி ராஜா மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். டீன்ஏஜ் குறும்பு மற்றும் காதலில் ஈசா - மாளவிகா மனோஜ் ஜோடி கவர்கிறது. அனுஸ்ரேயா ராஜன்,ஜெயஸ்ரீ பினுராஜ்,ரேகா குமணன்,மலர் கைசின்,ஸ்மத் பானு, அருள்குமார்,சன்சாகுல், சிறுவன் தீனன் மற்றும் சிறுமி தீக்‌ஷாஸ்ரீ என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.


சாம் சி.எஸ் பின்னணி இசையும் பாடல்களும் படத்தின் உணர்ச்சிக் காட்சிகளுக்குப் பெரும் பலம் சேர்த்துள்ளன. மகேஷ் சுவாமியின் எதார்த்தமான ஒளிப்பதிவு படத்திற்குப் பலம்.


இஸ்லாமியக் குடும்பங்களில் தலைமுறை தாண்டிப் பெண்கள் எப்படி முற்போக்கான சிந்தனையுடன் வளர்கிறார்கள் என்பதை இயக்குநர் அழகாகக் காட்டியுள்ளார் மீரா கதிரவன். 'ஹபீபி' தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் கண்களைக் குளமாக்கும் அளவிற்கு நேர்மையான மற்றும் எதார்த்தமான ஒரு படைப்பு.

0 comments:

Pageviews