எங்கள் தங்கம் திரை விமர்சனம்
சமந்தா நடிப்பில் நந்தினி ரெட்டி இயக்கத்தில் வெளியாகியுள்ள 'எங்கள் தங்கம்' திரைப்படம், குடும்ப உறவுகளையும் அதிரடி ஆக்ஷன் அம்சங்களையும் கலந்து சொல்லியிருக்கும் படம்.
ஆதரவற்ற இல்லத்தில் வளர்த்து வரும் சமந்தா, கௌதமி, ஆனந்த் தம்பதிகளின் மூத்த மகனான திகந்த் மஞ்சாலேவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். 3 வருடங்களுக்குப் பிறகு கணவரின் தங்கை திருமணத்திற்காக கிராமத்திற்கு வருகிறார். பாரம்பரிய மிக்க அவரது குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரின் அன்பை பெறுவதற்காக அவர்களுக்கு பிடித்த மாதிரி நடந்துக் கொள்கிறார். இதற்கிடையே, சிறையில் தண்டனை அனுபவிக்கும் கொலை குற்றவாளி குல்ஷன் தேவய்யா அடியாள் ஒருவனை அனுப்பி சமந்தா குறித்து விசாரித்து வர சொல்கிறார். விசாரிக்க சென்றவன் எதிர்பாரத விதமாக இறந்து விடுகிறான், இதனையடுத்து சிறையில் இருந்து தப்பிக்கும் குல்ஷன் சமந்தாவை நேரில் சந்தித்து தன்னுடன் வந்துவிடு இல்லாவிட்டால் உனது குடும்பத்தை கொன்றுவிடுவேன் என்று கூறுகிறான். இறுதியில் சமந்தா தான் யார் ? என்ற உண்மையை குடும்பத்தில் கூறினாரா? இல்லையா? குடும்பத்தை காப்பாற்ற சமந்தா எடுத்த முடிவு என்ன? கணவரின் தங்கை திருமணம் நடந்ததா ? இல்லையா ? என்பதே ‘எங்கள் தங்கம்’ . படத்தின் மீதிக்கதை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆக்ஷன் அவதாரத்தில் சமந்தா மிரட்டியுள்ளார். அனைவரின் அன்பை பெறுவதக்காக அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் ரசிக்க முடிகிறது. வில்லனாக நடித்திருக்கும் குல்ஷன் தேவய்யா, மருத்துவராக சமந்தாவின் கணவராக நடித்திருக்கும் திகந்த் மஞ்சாலே, மாமியாராக நடித்திருக்கும் கெளதமி, மாமனராக நடித்திருக்கும் ஆனந்த், பாட்டியாக நடித்திருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி, தோழியாக நடித்திருக்கும் மன்ஜூஷா அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும், ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி குடும்ப திரைப்படத்தை ஆக்ஷன், காமெடி கலந்து அனைவரும் ரசிக்கும் விதத்தில் கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார். எங்கள் தங்கம் திரைப்படம் சமந்தாவின் அதிரடியான கம்பேக். குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படம்.
.jpg.jpeg)










0 comments:
Post a Comment