லயன்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தேசிய விருதுகள் விழா: சமூக மாற்றத்தை உருவாக்கும் சிறந்த ஆளுமைகளுக்கு சென்னையில் கவுரவம்
லயன்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (LCOI) சார்பில் தேசிய விருது வழங்கும் விழாவை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
உலகின் மிகப்பெரிய சேவை அமைப்பான லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல், 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் புவியியல் பகுதிகளில் 14 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 8,500 கிளப்புகள் மற்றும் 2.9 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். 1956ஆம் ஆண்டு இந்தியாவில் தனது சேவையைத் தொடங்கிய லயன்ஸ் அமைப்பு, இன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 65 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ சேவை, பார்வை பாதுகாப்பு, நீரிழிவு நோய் விழிப்புணர்வு, பேரிடர் நிவாரணம், கல்வி, பெண்கள் மற்றும் இளைஞர் மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் லயன்ஸ் அமைப்பு தொடர்ந்து சேவையாற்றி வருகிறது. இந்தியாவில் லயன்ஸ் கிளப்புகள் 175 கண் மருத்துவமனைகள், 50 ரத்த வங்கிகள், 55 டயாலிசிஸ் மையங்கள், 200-க்கும் மேற்பட்ட பள்ளிகள், குழந்தைகள் பூங்காக்கள், தடுப்பூசி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக நல அமைப்புகளை நடத்தி வருகின்றன. மேலும் கல்வி உதவித்தொகைகள் வழங்குதல், தினசரி உணவுத் திட்டங்கள், மருத்துவ உதவிகள் போன்ற சமூக சேவைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆண்டுதோறும் இந்தியாவில் மட்டும் 400 கோடி ரூபாயைத் தாண்டிய மதிப்பில் சமூக சேவைத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இந்நிகழ்வில் லயன்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தலைவர் AP சிங் பேசியதாவது
பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் என்பது உலகின் மிகப்பெரிய சேவை அமைப்பாகும். எங்களின் தாரக மந்திரம் ‘We Serve’ என்பதாகும். சமூகத்தின் தேவைகளுக்கு பதிலளிப்பதே எங்கள் நோக்கம். அது சுகாதாரம் தொடர்பானதாக இருந்தாலும், இளைஞர் மேம்பாடு, பெண்கள் மேம்பாடு, இயற்கை பேரிடர் நிவாரணம், கல்வி உதவித்தொகை வழங்குதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீரிழிவு நோய் விழிப்புணர்வு, குழந்தைகளின் பார்வை இழப்பைத் தடுப்பது அல்லது பசியை ஒழிப்பது போன்ற எந்தத் துறையாக இருந்தாலும், சமூகத்திற்குத் தேவைப்படும் இடங்களில் லயன்ஸ் கிளப்புகள் எப்போதும் முன்னின்று செயல்பட்டு வருகின்றன.
அரசு அமைப்புகள், பெருநிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் எங்கள் சேவைகளை மேலும் விரிவுபடுத்த முயற்சி செய்கிறோம். சமூக முன்னேற்றம் என்பது ஒரே ஒரு அமைப்பால் மட்டுமே சாத்தியமாகாது. கூட்டாக செயல்படுவதன் மூலமே அதிகமான மக்களை சென்றடைய முடியும்.
அந்த நோக்கத்தில்தான் ஒவ்வொரு ஆண்டும் ‘லயன்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா விருதுகள்’ வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் லயன்ஸ் உறுப்பினர்களுக்காக அல்ல. சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவத் துறை நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த ஆளுமைகளுக்காக வழங்கப்படுகின்றன. அவர்களின் சேவையை அங்கீகரிப்பதோடு, அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதும், எதிர்காலத்தில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதும் இந்த விருதுகளின் முக்கிய நோக்கமாகும்.
இந்த ஆண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிறந்த ஆளுமைகள் இந்த விருதைப் பெறுகின்றனர். அவர்களை கவுரவிப்பதன் மூலம் சமூக சேவைக்கு மேலும் ஊக்கமளிக்க முடியும் என்று நம்புகிறோம். அவர்களின் வெற்றிக் கதைகள் பலருக்கு உந்துசக்தியாக அமையும்.
மேலும், நாளை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள லயன்ஸ் மாவட்டங்களின் எதிர்கால தலைமைப் பொறுப்பேற்க உள்ள நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் சென்னை ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெறுகிறது. 2026-27 லயன்ஸ் ஆண்டிற்கான தலைமைத்துவத்தை உருவாக்கும் முக்கிய நிகழ்வாக இது அமையும்.
இந்த நிகழ்வுகளின் மூலம் சமூக சேவையை மேலும் வலுப்படுத்தவும், நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களித்து வரும் சிறந்த ஆளுமைகளை அங்கீகரிக்கவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்றார்.
இந்த ஆண்டுக்கான லயன்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தேசிய விருதுகள் பெறுவோர் பட்டியலில் ரூபா நிறுவனத்தின் தலைவர் பிரஹ்லாத் ராய் அகர்வால், ஸ்கிப்பர் லிமிடெட் தலைவர் சஜ்ஜன் பன்சால், எஸ்ஆர்எம்பி குழுமத் தலைவர் பிரிஜ்மோகன் பெரிவால், செஞ்சுரி ப்ளைபோர்டு தலைவர் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்ற சஜ்ஜன் பஜாங்கா, கிராண்ட் தோர்ன்டன் நிறுவனத் தலைவர் விஷேஷ் சந்தியோக், என்.டி.ஆர். சுகாதார அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பி. சந்திரசேகர், லுமினோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தீபக் கோயல், முன்னாள் இஸ்ரோ இயக்குநரும் நாஸ்காம் முன்னாள் தலைவருமான கிரண் கார்னிக், முன்னாள் செபி தலைவர் டி.ஆர். மேத்தா, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி குஜராத் பிரிவு தலைவர் அஜய் படேல், டச் வேர்ல்ட் லவ் தெரபி நிறுவனர் அலகானந்தா ராய், இன்போசிஸ் ஃபவுண்டேஷன் துணைத் தலைவர் மனிஷா சபூ, சிங்கி அண்ட் கோ நிறுவனர் எம்.எம். சிங்கி, சேவா ஃபவுண்டேஷன் சார்பில் குல்தீப் சிங் மற்றும் சங்கம் குழுமத் தலைவர் ராம்பால் சோனி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
தேசிய அளவில் சமூக மாற்றத்தை உருவாக்கிய ஆளுமைகளை கௌரவிக்கும் இந்த விருது வழங்கும் விழா இன்று மாலை சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது..அதனைத் தொடர்ந்து நாடு முழுவதிலுமிருந்து வருகை தரும் லயன்ஸ் அமைப்பின் தலைமை நிர்வாகிகளுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டங்களும் அடுத்த மூன்று நாட்கள் நடைபெற உள்ளன.











0 comments:
Post a Comment