காட்டாளன் திரை விமர்சனம்

 

ஒரு கடத்தல்காரர் கேரளாவில் உள்ள ஒரு வனப்பகுதியையும், அங்கு வாழும் பழங்குடியின மக்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார், மேலும் அங்கிருக்கும் யானைகளை கொன்று அதன் தந்தங்களை கடத்தி வருகிறார். அவரது இடத்தை பிடிக்க ஒருவர் நினைக்கிறார், அந்த கடத்தல்காரர் கடத்தும் தந்தங்களை காவல்துறை உதவியுடன் கைப்பற்றுவதோடு, அவரது கடத்தல் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கிறார். பறிபோன தனது தந்தங்களை மீட்பதற்காக நாயகனை  களம் இறக்குகிறார். அவரது தந்திரமான திட்டத்தால் இழந்த தந்தங்களை பெறுவதோடு, காவல்துறையை ஏமாற்றி விட்டு மீண்டும் தந்தங்களை கடத்துகிறார். இதற்கிடையே சுனிலுக்கு உதவி செய்து வந்த நாயகன் அவருக்கு எதிராக செயல்படுவதோடு, பழங்குடியின மக்களுக்கு உதவியாகவும் இருக்கிறார். இது பிடிக்காத அந்த தலைவன் ததனது எதிரியுடன் சேர்ந்து அவனை அழிக்க முயற்சி செய்கிறார், இறுதியில் இந்த யுத்தத்தில் வெற்றி பெற்றது என்பதை ஆக்சன் கலந்து சொல்வதே இந்த  ‘காட்டாளன்’ படத்தின் கதை. 


இந்தப் படம் தமிழில் உருவானாலும் இடம் சூழல் மற்றும் நாயகர்கள் என அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர், அதிலும் முக்கியமாக நாயகனாக நடித்திருக்கும் ஆண்டனி வர்கீஸின் தோற்றம், நடிப்பு மற்றும் எக்ஸ்பிரஸன் ஆகியவை நன்றாக இருந்தது. ஆக்‌ஷன் காட்சிகளில் நன்கு நடித்துள்ளார், அதிகம் பேசாமல், அளவான நடிப்பின் மூலம் அழுத்தமான கதாபாத்திரத்திற்கு இறுக்கமான முகத்தோடு பலம் சேர்க்க முயற்சித்திருக்கிறார்.


மேலும் இதில் வில்லனாக நடித்திருக்கும் சுனில், வழக்கம் போல் தனது முரட்டுத்தனமான வில்லத்தனத்தால் மிரட்டுகிறார். எந்த கதாபாத்திரம் எடுத்துக்கொண்டாலும் தனக்கென முத்திரையை பதித்து விடுகிறார். அதே போல் மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் கபீர் துகான் சிங், ஸ்டைலிஷ் வில்லனாக கவனம் ஈர்க்கிறார். திடீர் எண்ட்ரி கொடுக்கும் துஷாரா விஜயன் ஆக்‌ஷன் காட்சிகளில் கடுமையாக உழைத்திருக்கிறார். படத்தில் அது நன்கு தெரிகிறது. 


பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.


கே ஜி எப் , சலார்  போன்ற பிரம்மாண்ட படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் , இசை நன்றாகவே இருத்தது.

ரெனாடைவ் ஒளிப்பதிவில் ஆக்‌ஷன் காட்சிகள் அமர்க்களம். கதாபாத்திரங்கள் அறிமுகம் மற்றும் அவர்களுக்கான பில்டப் கொஞ்சம் அதிகம் என்றாலும், அதை ரசிக்கும்படியும், எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்படியும் ஒளிப்பதிவாளர் ரெனாடைவ் காட்சிப்படுத்தியிருக்கிறார்.



இந்த படத்தை இயக்குநர் பவுல் ஜார்ஜ் இயக்கியிருக்கிறார். இந்தபடத்தை பார்க்கும்போது’கே.ஜி.எப்’, ’புஷ்பா’, ‘விக்ரம்’ போன்ற படங்களின் தலையீடு இருப்பதை நம்மால் உணர முடிகிறது.   யானை தந்தம் கடத்தல் மற்றும் அதன் பின்னனியை கருவாக எடுத்துக் கொண்ட இயக்குநர் , ஒரு நல்ல மேக்கிங்காக நமக்கு இதனை கொடுத்துள்ளார், 


மொத்தத்தில், ‘காட்டாளன்’ ஆக்ஷன் ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்து.

0 comments:

Pageviews