எக்ஸாம் திரை விமர்சனம்

 

சிறையில் இருந்து வெளியே வரும் துஷாராவிற்கு ஜெயிலர் அப்பாஸ் உதவி செய்து வருகிறார். இந்நிலையில் துணை காவல் கண்காணிப்பாளரான (DSP) அதிதி  பாலன்,  தனது  5 வயது குழந்தையை அம்மாவிடம் விட்டுவிட்டு  தைகாராவிற்கு மாற்றலாகி காரில் சென்று கொண்டிருக்கும் போது  அவரை துஷாரா கடத்தி சென்று விடுகிறார். அதிதிக்கு பதிலாக ஆள் மாறாட்டம் செய்து துஷாரா பதவியேற்கிறார். இந்நிலையில் அரசாங்கம் நடத்தும் உயர் அதிகாரிகள் பணிகளுக்கான போட்டி எழுத்து தேர்வு தைக்காராவில் உள்ள தேர்வு மையத்தில் நடைபெறுகிறது. அத்துடன் இந்த தேர்வு மையத்தில் முறைகேடு நடக்கவிருப்பதாக ரகசிய தகவல்கள் கிடைக்கிறது. இதனையடுத்து இந்த முறைகேட்டின் பின்னணியில் உள்ள சதியை  கண்டுபிடிக்க துஷாரா தீவிரம் காட்டுகிறார்.   இந்நிலையில் துஷாரா பிடியில் இருந்து  அதிதி தப்பிச் செல்கிறார்.  இறுதியில் தேர்வு முறைகேடு செய்பவர் யார் ? என்பதை  துஷாரா  கண்டுபிடித்தாரா ? இல்லையா ? துஷாரா சிறைக்கு செல்ல காரணம் என்ன? தப்பிச் சென்ற அதிதியை,  துஷாரா கண்டுபிடித்தாரா? இல்லையா?  என்பதே  மீதிக்கதை.  


ஜான்சி கதாபத்திரத்தில் நடித்திருக்கும் துஷாரா விஜயன் கிராமத்து அப்பாவி பெண்ணாக இயல்பான நடிப்பால் கவர்கிறார். படிப்பு , துணிவு, கோபம் என அனைத்திலும் அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார். குறிப்பாக சண்டை காட்சியில் மிரட்டியிருக்கிறார். முழுப்படத்தையும் தன்  தோள் மீது  சுமந்து நிற்கிறார்.


மரமல்லி  கதாபத்திரத்தில் நடித்திருக்கும் அதிதி பாலன் குறுக்கு வழியில் முன்னேறு நினைக்கும் குள்ளநரி குணம் கொண்டவராக பணத்திற்காக எதையும் செய்யும் கதாபாத்திரத்தில் பொருந்தியிருக்கிறார்.


ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அப்பாஸ் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார் . அக்காவாக வரும் வசுந்தரா  மற்றும் நரேன் என படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் சாம் சிஸின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது . அருண் அமரேந்திரன் ஒளிப்பதிவு கதை ஓட்டத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.


 TNPC  தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை மைய கருவாக வைத்து ஒரு முழு நீள  சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்  இயக்குநர் A.சற்குணம் இத்திரைப்படத்தில் வசதி படைத்தவர்களால் நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களின் வாழ்க்கை எந்த நிலைக்கு செல்கிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.  ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக கதையை நகர்த்தி சென்றிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

0 comments:

Pageviews