Blast திரை விமர்சனம்

 

கராத்தே மாஸ்டரான அர்ஜுன், மனைவி அபிராமி , மகள்  ப்ரீத்தி முகுந்தன், தம்பி விவேக் பிரசன்னா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். அர்ஜுன் மகள் ப்ரீத்தி முகுந்தனுக்கு சிறு வயதில் இருந்தே கராத்தே சொல்லிக் கொடுப்பதோடு, யாருக்கும்  ஒரு பிரச்சனை என்றாலும் தைரியமாக அதை தட்டிக் கேட்டாக வேண்டும் என்று சொல்லி வளர்க்கிறார். இந்நிலையில் தொழிலதிபரான ஜான் கொக்கேன்,  ரூ.7000 கோடி மதிப்பிலான ஒரு திட்டத்தை முடிப்பதற்காக அமைச்சரான பி.எல்.தேனப்பனுக்கு ரூ.1000 கோடியை லஞ்சமாக கொடுக்க சம்மதித்து, அந்த பணத்தை அர்ஜுன் சிதம்பரம் மூலம் அமைச்சரின் டிரஸ்ட் வங்கி கணக்கில் மாற்றும் பணியை மேற்கொள்ளும் வேலையில்  ஒரு விபத்தில்  மாட்டிக்கொள்ள போலீஸ் அவரை மருத்துவ மனையில் சேர்த்து அவர் குறித்து விசாரித்து வருகிறது.


இதே சமயம் மருத்துவ மனையில் இருக்கும் அர்ஜுன் சிதம்பரம் 18 போலீசை கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல அவருக்கு ரௌடியான பவன் உதவி  செய்கிறார். இந்நிலையில், ப்ரீத்தி முகுந்தனிடம் செயின் பறிக்க முயற்சிக்கும் ஒரு குற்றவாளியை அவர் அடித்து  போலீஸில் பிடித்து கொடுக்கிறார். 


இதனால்  கோபம் கொள்ளும் ரௌடி பவன்  அர்ஜுன் குடும்பத்தை கொலை செய்வதற்காக தனது தம்பி பாலா ஹாசனுடன் சேர்த்து சில அடியாட்களை அனுப்பி வைக்கிறார்,  தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக அதிரடியில் இறங்கும் அர்ஜுன் குடும்பம்  பாலா ஹாசனுடன் வந்த அனைவரையும் கொலை செய்து விடுகிறார்கள்.


இறுதியில் அர்ஜுன் குடும்பம் இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வந்தார்களா? இல்லையா ? அர்ஜுன் சிதம்பரம் அமைச்சருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்தாரா ? இல்லையா? என்பதே ’பிளாஸ்ட்’  படத்தின் மீதிக்கதை.


கராத்தே மாஸ்டராக நடித்திருக்கும் அர்ஜுன் அனுபவ நடிப்பின் மூலம் கவர்கிறார். அபிராமி அமைதியான குடும்பத்தலைவியாக வருபவர் இடைவேளை போது  யாரும் எதிர்பார்க்காத அதிரடி நாயகியாக சண்டையில்  அசத்தியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தன் படத்தில்  பார்ப்பதற்கு நிஜ கராத்தே வீராங்கனை போல அதிரடியில் மிரட்டுகிறார். யாருக்கும் ஒரு பிரச்சனை என்றால் அடித்து தும்சம் செய்து விடுகிறார்.


வில்லன்களாக நடித்திருக்கும் ஜான் கொக்கேன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் மற்றும் அர்ஜுன் தம்பியாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, போலீசாக வரும் திலீபன்  என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் பின்னணி இசை கதை வேகத்திற்கு ஏற்றவாறு இருக்கிறது. அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு விறுவிறுப்பாக கொண்டு செல்ல துணை நிற்கிறது.


தற்காப்பு கலைகள் பெண்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை மைய கருவாக வைத்து ஒரு ஆக்‌ஷன்  அதிரடி திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்  சுபாஷ் கே.ராஜ் இத்திரைப்டத்தில் சுவாரஸ்யமான திரைக்கதை, விறுவிறுப்பான காட்சிகள், அதிரடி சண்டைகள் என அனைத்தையும்  கலந்து கொடுத்திருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதிவரை அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத விதத்தில் கதையை கொண்டு சென்ற இயக்குனருக்கு வாழ்த்துக்கள் .

0 comments:

Pageviews