வங்காள விரிகுடா திரை விமர்சனம்

 

காதலில் தோல்வி அடைந்து நீண்ட நாட்களுக்கு பிறகு தனது முன்னாள் காதலியைப் பார்க்கும்போது அவள் தற்கொலை செய்ய முயற்சிக்கிறாள், அவளை காப்பாற்றி அவரோடு குடும்பம் நடத்துகிறார்.அதற்காக ஒரு கொலையும் செய்கிறார்.அதனால் பல சிக்கல்கள் உருவாகின்றன. அந்த கொலை செய்ததால் என்னென்ன விளைவு ஏற்பட்டது என்பதை விவரிக்கும் படம்தான் இந்த வங்காள விரிகுடா.


இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கும் குகன் சக்ரவர்த்தி, தமிழ்த்திரையுலகின் முக்கிய நடிகர்களை நினைவு படுத்தும்படி நடித்திருக்கிறார்.ஆடல் பாடல் சண்டை என எல்லாவற்றிலும் கலந்துகட்டி அடித்திருக்கிறார். மேலும் நாயகனாக நடித்திருப்பது மட்டுமின்றி, தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை, நடனம், சண்டைப்பயிற்சி (தனி), உடைகள், ஸ்டில்ஸ், ஒப்பனை, பின்னணிப் பாடகர், பின்னணி இசை, புரொடக்ஷன் டிசைனர், டைட்டிலிங், சிகை அலங்காரம், வெளிப்புறப் படப்பிடிப்புத் தள நிர்வாகி, தயாரிப்பு, இயக்கம் ஆகிய அனைத்தையும் அவரே செய்திருக்கிறார். இயக்குனர் டி ராஜேந்திரனுக்கு பிறகு இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார், .


மேலும் நாயகியாக நடித்திருக்கும் அலினாஷேக், முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் பொன்னம்பலம், வையாபுரி, வாசுவிக்ரம் ஆகியோரும் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர், 


இந்தப் படத்தில் பேரறிஞர் அண்ணா, கலைஞர்,எம்.ஜி.ஆர்,அப்துல்கலாம் ஆகியோரைப் பற்றிய பாடல் இடம்பெற்று கவனம் ஈர்க்கிறது.இசையமைத்து பாடல் எழுதி பாடியிருப்பதும் இயக்குனர் , நாயகன் குகன் சக்ரவர்த்தியே.


ஒரு நல்ல காதல் கதையாகத் தொடங்கி மர்மம்,திகில் ஆகியனவற்றில் பயணிக்கிறது திரைக்கதை. ஒரு சில சறுக்கல்கள் இருந்தாலும் திரைக்கதையில் இருக்கும் திருப்பங்கள் கவர வைக்கின்றன. அப்துல்கலாமின் கனவு காணுங்கள் எனும் கருத்தை மையமாகக் கொண்டு ஒரு சமூக கருத்துள்ள படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் குகன் சக்ரவர்த்தி.


இந்த " வங்காள விரிகுடா " கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம்.

0 comments:

Pageviews