Tere Ishk Mein திரை விமர்சனம்
லா கல்லூரியில் படிக்கும் தனுஷ், தாயை இழந்த துயரத்தில் மனஉளைச்சலுடன், வெளிப்படையாக ஒரு முரட்டு மாணவனாகத் தன்னை காட்டிக் கொள்ளும் ஒருவர். அதே கல்லூரியில் சைக்காலஜியில் முதுகலைப் பட்டம் பெற முயற்சிக்கும் கிரித்தி சானன், “அன்பின் மனோ தத்துவத்தின் மூலம் எப்படிப்பட்ட கடுமையான மனிதரையும் மாற்ற முடியும்” என்கிற ஆய்வுத் திட்டத்தை முன்வைக்கிறார். ஆனால் கல்லூரி முனைவர்கள் இதை இயலாத ஒன்றாகக் கூறி நிராகரிக்கும் தருணத்தில், அவர் தனுஷை சந்திக்கிறார். அந்தச் சந்திப்பு தனுஷின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை உருவாக்குகிறது. அவன் உள்ளத்தில் காதல் முளைக்கிறது. ஆனால் கிரித்தி அவரை ஒரு நண்பனாக மட்டுமே பார்க்கிறார். இந்த இருவருக்குள் உருவாகும் உறவு, அதைத் தொடரும் உணர்ச்சி மோதல்கள் காதல் வெற்றி பெறுகிறதா? தோல்வியில் முடிகிறதா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
தனுஷ் எமோஷ்னல் காட்சிகளில் பின்னியெடுத்துவிட்டார். தனுஷுக்கு சற்றும் குறையாமல் நடிப்பில் வெளித்துள்ளார் நாயகி க்ரிதி சானோன். அழகிலும் மனதை மயக்குகிறார். பிரகாஷ்ராஜ் ஒரு காட்சியில் அசுரன் தனுஷை நினைவுப்படுத்துகிறார். அட்டகாசமான நடிப்பு.
ஏ.ஆர். ரகுமான் இசை கதையின் உணர்ச்சிகளையும், காட்சிகளின் ஈர்ப்பையும் பல மடங்கு உயர்த்தியுள்ளது. ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவான ‘தேறே இஷ்க் மேன்’ ஒரு வித்தியாசமான காதல் அனுபவம்.











0 comments:
Post a Comment