Messenger திரை விமர்சனம்
நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் மனம் வெறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்.அந்தநேரத்தில் அவருடைய முகநூல் அரட்டை பகுதியில் தொடர்ந்து அவருக்கு குறுஞ்செய்தி வருகிறது.அதில், தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று இருக்கிறது.அதிர்ச்சியடையும் நாயகன், செய்தி அனுப்பியவரைத் தேடுகிறார்.அது ஒரு பெண்.அவர் இறந்து இரண்டு மாதங்களாகின்றன என்கிற பேரரதிர்ச்சித் தகவல் அவருக்குக் கிடைக்கிறது. இறந்தவர் எப்படி செய்தி அனுப்பமுடியும்? என்று தேடிப்போனால் மேலும் சில அதிர்ச்சித் தகவல்கள் கிடைக்கின்றன.அவை என்னென்ன? அதன்பின் என்னவெல்லாம் நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
இயக்குனர், நம்ப முடியாத கற்பனையைக் கொண்டு ஒரு காதல் கதையை உருவாக்கியுள்ளார். இந்த கதை நடைமுறையில் சாத்தியமில்லாதது என்றாலும், அதை நம்ப வைக்கும் விதத்தில் சொல்ல முயன்றுள்ளார்.
நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் தனது கதாபாத்திரத்தில் முழுமையான ஈடுபாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அவரின் உண்மையான காதலின் வெளிப்பாடு நம்பகமாக தெரிகிறது. நாயகியாக நடித்துள்ள பாத்திமா நஹும் தனது இயல்பான நடிப்பால் காதல் காட்சிகளில் சிறப்பாக திகழ்கிறார். துணை வேடங்களில் வைசாலி, மனிஷா ஜாஸ்னானி, லிவிங்ஸ்டன், ஜீவா ரவி ஆகியோரின் நடிப்பும் நன்றாக அமைந்துள்ளது.
பாலகணேஷன் ஒளிப்பதிவும், அபுபக்கர் இசையும் படத்துக்கு தேவையான வலுவை வழங்குகின்றன. தொழில்நுட்ப ரீதியாக படம் சீராக இருந்தாலும், கதையின் வித்தியாசம் சில இடங்களில் நம்பகத்தன்மையை இழக்கச் செய்கிறது.
மொத்தத்தில், ‘மெசஞ்சர்’ என்பது கற்பனையும் காதலும் கலந்த ஒரு முயற்சி. சற்று நம்பமுடியாத கதையைக் கொண்டிருந்தாலும், அதை உணர்ச்சியுடன் சொல்ல முயன்றிருக்கும் இயக்குனரின் தைரியம் பாராட்டத்தக்கது.











0 comments:
Post a Comment