தேசிய தலைவர் திரை விமர்சனம்
சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டே கதை ஆரம்பமாகிறது. ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட முத்துராமலிங்க தேவர், அப்போது அரசியல் களத்தில் சேதுபதி மன்னரை எதிர்த்து தேர்தலில் நிற்கும் துணிச்சலை காட்டுகிறார். தேர்தலில் வெற்றி பெற்று, ஆங்கிலேயரின் கைரேகைச் சட்டத்தை எதிர்த்து போராடுகிறார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர், காங்கிரஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விலகி, பார்வேர்ட் பிளாக் கட்சியில் இணைகிறார். சுதந்திரம் பெற்ற பின்னரும் சமூக சேவைகளில் ஈடுபட்ட முத்துராமலிங்க தேவர், தென் மாவட்டங்களில் வலிமையான தலைவராக உருவெடுக்கிறார். ஆனால், அவரது வளர்ச்சி காங்கிரஸ் தலைமைக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. அவரை மீண்டும் காங்கிரஸில் இணைக்க முயற்சிக்கும் போது அது தோல்வியடைந்ததும், அவர்மீது ‘சாதி வெறியர்’ என்ற குற்றச்சாட்டை ஒட்ட முயற்சிக்கிறது. இதற்கிடையில், அரசின் அமைதி பேச்சுவார்த்தையில் தலித் சமூகத்தின் தலைவராக விளங்கிய இமானுவேல் சேகரன், தேவரை எதிர்த்து பேசுகிறார். சில நாட்களிலேயே, அவர் மர்ம கும்பலால் கொலை செய்யப்படுகிறார். அந்த வழக்கில் முத்துராமலிங்க தேவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்படுகிறார். தன்னை நிரபராதி என்று நிரூபிக்க சட்டப்போராட்டத்தில் ஈடுபடும் தேவர், அதில் வெற்றி பெறுகிறாரா? அதன்பிறகு அவரது வாழ்க்கை எவ்வாறு திரும்புகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
முத்துராமலிங்க தேவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெ.எம்.பஷீர் முத்துராமலிங்க தேவரை நம் கண் முன்னே காட்சி படுத்துகிறார். பாரதிராஜா, ராதா ரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரின் நடிப்பு படத்துக்கு பெரிய பலம்.
இளையராஜா இசை மூலம் படத்துக்கு உயிரூட்டிருக்கிறார். திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்தையும் ஒரே நேரத்தில் கவனித்துள்ள ஆர். அரவிந்தராஜ், முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை சினிமா வடிவில் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.











0 comments:
Post a Comment