வட்டக்கானல் திரை விமர்சனம்
கொடைக்கானல் மலையில் இருக்கும் அழகு மிகு வட்டக்கானல் பகுதியில் நடக்கும் கதை. ஆனால், அங்கே விளையும் போதைக் காளானைக் கைப்பற்றி காலம் காலமாக விற்று ஒரு போதை சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார் ஆர்.கே.சுரேஷ். அவரது எல்லா அடாவடி வேலைகளுக்கும் அவர் எடுத்து வளர்த்த துருவன் மனோ, கபாலி விஸ்வந்த், விஜய் டிவி சரத் காவலர்களாக இருக்கிறார்கள். ஆனால், ஆர்.கே.சுரேஷைக் கொல்ல எப்போதும் வித்யா பிரதீப் முயன்று தோற்றுக் கொண்டிருக்கிறார். அதன்பின் என்ன நடந்தது என்பதை எதிர்பாராத திருப்பத்துடன் மீதிக்கதை நகர்கிறது.
தாதா வில்லனாக ஆர்.கே.சுரேஷ் , தோற்றமும் கம்பீரம் அனல்பறக்கும் ஆக்ஷன் காட்சிகள், நடிப்பால் மிரள வைத்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன் துருவன் சத்யாவாக தன்னுடைய இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். வர்ஷாவாக மீனாட்சி கோவிந்தராஜன் அழகு பதுமையாக வாய் பேச முடியாத பெண்ணாக தன்னுடைய சைகை மூலம் புரிய வைக்கும் இடத்தில் மனதை கொள்ளை கொள்கிறார். சில காட்சிகள் தான் என்றாலும் செல்லபாண்டியாக ஆடுகளம் நரேன், அவரது மனைவி ராதாவாக வித்யா பிரதீப் பழி தீர்க்கும் மங்கையாக தன்னுடைய ஆவேச நடிப்பில் அனைவரின் கவனம் ஈர்க்கிறார்.
ளிப்பதிவாளர் எம்.ஏ. ஆனந்த், இசையமைப்பாளர் மாரிஸ் விஜய், படத்தொகுப்பாளர் சாபூ ஜோசப் ஆகியோர் திரைக்கதையை தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்தியுள்ளனர்.
இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதைப்பொருள் காளானின் சமூக அழிவு பற்றி ஆழமாகச் செல்லாமல், ஒரு ரவுடியின் அட்டகாசம் தொடங்கி அவனது வீழ்ச்சி வரை இந்தப் படம் பேசுகிறது கதையில் கடைசி வரை பரபரப்பு குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் பித்தாக் புகழேந்தி.











0 comments:
Post a Comment