நாயகன் திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் எவ்வளவோ திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. நாயகன் படம் இந்திய சினிமாவை உலக அரங்கில் எடுத்துச் சென்ற படம் என்றும் சொல்லலாம். 38 வருடம் கழித்து டிஜிட்டல் முறை தொழில்நுட்பம் மிக அற்புதமாக செய்து இந்த படத்தை கொடுத்திருக்கிறார்கள் அதற்காக இந்த குழுவை நிச்சயமாக பாராட்டலாம்.
ஒரு தொழிலாளர் சங்க தலைவரான தன் தந்தையை துப்பாக்கி குண்டுக்கு பலி கொடுத்து விட்டு, அதற்கு காரணமான ஒரு போலீஸ் அதிகாரியை கொன்றுவிட்டு, பம்பாய்க்கு தப்பி செல்கிறான் ஒரு சிறுவன். அந்த சிறுவன் வளர்ந்து, பெரியவனாகி தான் இருக்கும் பகுதியை ஆக்ரமிக்க வருபவர்களிடமிருந்து காப்பாற்றி, அந்த பகுதிக்கு தலைவனாகிறான். பலருக்கு நல்ல செயல்களைச் செய்யும் அவன், பல கடத்தல் தொழில்களிலும் ஈடுபடுகிறான். குறுகிய காலத்தில் அவன் மிகப்பெரிய Don ஆகிறான். ஊருக்கு நல்லவனாக தெரியும் அவன், அவன் குடும்பத்தார்க்கு எவ்வாறு தெரிகிறான்? உண்மையிலேயே அவன் 'நல்லவனா? கெட்டவனா? இது தான் இந்த படத்தின் கதை.
கலைஞானி கமல்ஹாசன் 'வேலு நாயக்கர்' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட வாழ்த்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். நடிகை சரண்யாவுக்கு இது முதல் படம். 'நாளைக்கு கணக்கு பரீட்சை, சிக்கரமா விட்டுடுவிங்கள?' என்று கேட்கும் இடம், ஒரு வலி மிகுந்த வசனம். ஒரு வெகுளியான காதலியாகவும், இரண்டு பிள்ளைகளுக்கு பாசமிகு அம்மாவாகவும் நடிப்பில் மிளிர்கிறார். ஜனகராஜின் நடிப்பு இந்த படத்தில் ஒரு சிறப்பம்சம். ஒரு நகைச்சுவை நடிகனிடமிருந்து ஒரு மாறுபட்ட நடிப்பை காட்டியிருப்பது இயக்குனரின் திறமை. படத்தின் திரைக்கதை அமைப்பை மிகவும் சரியாக கையாண்டிருக்கிறார் மணிரத்னம்.
படத்திற்கு பெரிய பலம், இசைஞானியின் இசை. இந்த படத்தில் வரும் அணைத்து பாடல்களும் அருமை. குறிப்பாக பின்னணி இசை. ராஜா பல சமயங்களில் மனதை உருக வைக்கிறார்.
நாயகன் - இன்றைய இளைஞர்களும், சினிமா ரசிகர்களும் பார்க்க வேண்டிய படம்.











0 comments:
Post a Comment