பல்டி திரை விமர்சனம்
கபடி விளையாட்டு வீரர்கள் சிலர் அவர்களது விளையாட்டு மூலம் வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு பண ஆசைக்காட்டி தன் பக்கம் இழுக்கும் கந்து வட்டிகாரர் , கபடி களத்தை மறக்கடித்து, தனது கந்து வட்டி களத்தில் பயணிக்க வைக்கிறார். இதனால், நண்பர்களின் வாழ்க்கை திசை மாறி பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள, அதில் இருந்து மீண்டார்களா ? இல்லையா ? என்பதே இந்த ‘பல்டி’ படத்தின் கதை.
இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஷேன் நிகம், கபடி வீரருக்கான அத்தனை உடல்மொழியையும் கொண்டிருக்கிறார். மற்றொரு நண்பராக நடித்திருக்கும் சாந்தனு, அழுத்தமான கதாபாத்திரத்தில் அமர்க்களமாக நடித்து அசத்தியிருக்கிறார். நல்லவரா அல்லது கெட்டவரா என்று புரிந்துக்கொள்ள முடியாத கதாபாத்திறத்திற்கு தனது நடிப்பு மூலம் பலம் சேர்த்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் செல்வராகவன், அன்பாக பேசி வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் விதம் படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது. மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் திரை இருப்பு கவனம் ஈர்த்தாலும், அவருக்கான முக்கியத்தும் மிக குறைவாகவே உள்ளது. நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ரானி, கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் அலெக்ஸ் ஜெ.புலிக்கல் எத்தனை கேமராக்கள் பயன்படுத்தினார் என்பது தெரியவில்லை, ஆனால் காட்சிகளை மிரட்டலாக படமாக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் பாடல்கள் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு கூடுதல் வலிமை சேர்த்திருக்கிறது.
கந்து வட்டி மாஃபியாக்களுக்கு இடையிலான தொழில் போட்டி, அதில் சிக்கும் சில அப்பாவி இளைஞர்களின் சீரழியும் வாழ்க்கை, என்ற கதைக்கருவை வைத்துக்கொண்டு திரைக்கதை உருவாக்கியுள்ளார் இயக்குநர் உன்னி சிவலிங்கம். பல்வேறு திரைப்படங்களின் பாதிப்பாக இப்படத்தை இயக்கியிருந்தாலும், ஆரம்பம் முதல் முடிவு வரை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் படத்தை நகர்த்தி ரசிக்க வைத்து விடுகிறார்.











0 comments:
Post a Comment