பென் ஸ்டூடியோஸ் ஜெயந்திலால் காடா தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் “கும்கி 2”

 

யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை “கும்கி 2” படத்தை பென் ஸ்டூடியோஸ் சார்பில் வழங்கும் ஜெயந்திலால் காடா;


பிரபு சாலமன் இயக்கத்தில் விரைவில் வெளியாகும் கும்கி 2;


தமிழ் திரையுலகில் யானையை மையமாக கொண்டு மனதில் நிற்கும் கதை சொல்லப்பட்ட படம் “கும்கி”, பதிமூன்று வருடங்களுக்கு பிறகு அதன் அடுத்த பாகமாக “கும்கி 2” வெளியாகவுள்ளது.


முதல் பாகத்தில் பார்வையாளர்களை உணர்ச்சியால் உருக்கி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்ற “கும்கி” திரைப்படம், இன்றும் ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கிறது. அந்த வெற்றியைக் தொடர்ந்து, மேலும் பரபரப்பான கதைக்களத்துடன் “கும்கி 2” உருவாகியுள்ளது.


இந்த படத்தை பிரபு சாலமன் இயக்குகிறார், ஒரு குழந்தைக்கும், சிறிய யானைக்கும் இடையேயான பிணைப்பு தான் இப்படத்தின் மையக்கரு என படக்குழு தெரிவித்துள்ளது. கதாநாயகனாக நடிகர் மதி அறிமுகமாகிறார், அவரது கடினமான உழைப்புக்கும், பொறுமைக்கும் பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


இயற்கை, மனிதன், மற்றும் யானைகளின் உறவுகளை மையமாகக் கொண்டு கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் பிரபு சாலமன். படம் முழுக்க பரபரப்பான சம்பவங்களும், இதமான உணர்வுகளும் இணைந்து நகரும் விதத்தில் அமைந்துள்ளது.


முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைப்பாளராக பணியாற்றியுள்ளார். யானைகளை மையமாகக் கொண்ட காட்சிகள், பரந்த காடு மற்றும் இயற்கை அழகுகளை பதிவு செய்த காட்சியமைப்புகள், “கும்கி 2”-இன் சிறப்பாக இருக்கும்.


பென் ஸ்டூடியோஸ் மற்றும் பென் மருதர் சினி என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஜெயந்திலால் காடா மற்றும் தவல் காடா இணைந்து வழங்கும் “கும்கி 2”, விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கும்கி படத்தின் ரசிகர்கள் முதல் Gen z கிட்ஸ்கள் கொண்டாடும் வகையில் “கும்கி 2” திரைப்படம் உருவாகியுள்ளது.


மதி, ஷ்ரிதா ராவ், ஆன்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஹரிஷ் பேரடி, ஸ்ரீநாத் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.


தொழில்நுட்ப குழு விவரம்,


இயக்கம் - பிரபு சலமான்

தயாரிப்பு - ஜெயந்திலால் காடா, தவல் காடா

இசை - நிவாஸ் கே பிரசன்னா

ஒளிப்பதிவு - சுகுமார்

படத்தொகுப்பு - புவன்

கலை வடிவமைப்பு - விஜய் தென்னரசு

சண்டை - Stun சிவா

ஆடை வடிவமைப்பு - VP. செந்தில் அழகன்

தயாரிப்பு நிர்வாகம் - ஜெ. பிரபாஹர்

ஸ்டில்ஸ் - சிவா

ப்ரோமோஷன் - சினிமா பையன்

பி.ஆர்.ஓ - யுவராஜ்


0 comments:

Pageviews