சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரை விமர்சனம்
படத்தில் லிவிங்ஸ்டன் ரவுடியாக இருக்கிறார். இவரிடம் அடியாட்களாக தான் ஹீரோ வைபவ் மற்றும் மணிகண்டன் வேலை செய்கிறார்கள். இவர்கள் ஒரு போலியான கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். அப்போது ஒரு பணத்தை தொலைத்து விடுகிறார்கள். இவர்கள் தொலைத்த பணத்தை சரியான நேரத்தில் கொடுக்காவிட்டால் லிவிங்ஸ்டன் குடும்பத்திற்கு பெரிய பிரச்சனையே ஏற்படும். அதனால் அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஆனந்தராஜ், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன் மற்றும் சுனில் ரெட்டி ஆகியோரிடம் தஞ்சம் அடையும் வைபவ், அவர்களுடன் சேர்ந்து வங்கி ஒன்றை கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார். இவர்களின் திட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா ? என்பதை நகைச்சுவையாக சொல்வதே ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’.
காமெடி கதாபாத்திரத்திரங்களை சர்வசாதாரணமாக கையாளும் வைபவ், இதிலும் அப்படியே செய்திருக்கிறார். சாதாரணமாக அவர் பேசுவது கூட சிரிக்க வைக்கிறது. நண்பனாக நடித்திருக்கும் மணிகண்டன் கொடுத்த வேலையை சரியாக செய்திதிருக்கிறார். ஹீரோயின் அதுல்யா வழக்கம் போல் எல்லாம் படங்களிலும் வரும் ஹீரோயின் போலவே எப்போதாவது வந்து போகிறார். மறதி மொட்டை ராஜேந்திரன், குடிகாரன் சுனில், காது கேளாத, ஜான் விஜய், சைரன் சத்தம் கேட்டால் போலீஸாக மாறிவிடும் ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன், சிஹான் ஹூசைனி என அனைவரும் வழக்கம் போல் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்கள்.
வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து காமெடியாக இயக்குனர் இந்த படத்தை எடுத்துச் சென்றிருக்கிறார். முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் தான் பயங்கரமான காமெடியாக இருக்கிறது. பாதியில் என்டர்டைன்மென்ட் படமாக குடும்பத்தோடு ஜாலியாக எல்லோரும் சேர்ந்து பார்க்கும் வகையில் காட்சிகளை இயக்குனர் சிறப்பாக காண்பித்து இருக்கிறார். ஆரம்பத்திலிருந்து இறுதிவரை இயக்குனர் சிரிப்பலையில் கொண்டு சென்றிருக்கிறார்.
இமானின் இசை ரசிக்கும் படியாக இருக்கிறது. மேக்கிங், ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே நன்றாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் கதையில் விறுவிறுப்பையும் சுறுசுறுப்பையும் கொடுத்திருந்தால் படம் வேற லெவலில் சென்றிருக்கும்.
0 comments:
Post a Comment