Manidhargal Movie Review
ஸ்டுடியோ மூவிங் டர்ட்டில் மற்றும் ஸ்ரீ கிருஷ் பிக்சர்ஸ் சார்பில் ராஜேந்திர பிரசாத், நவீன் குமார், சாம்பசிவம், தரணிதரன் பரிமளா, குலோத்துங்கன் , யுவராஜ் ஆகியோர் தயாரிப்பில் ராம் இந்திரா இயக்கத்தில் கபில் வேலன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மனிதர்கள்’
கபில் வேலவன், தக்ஷா, குணவந்தன் தனபால், சாம்பசிவம், அர்ஜுன் தேவ், பிரேம் ஆகிய நண்பர்கள் சேர்ந்து ஊர் இரவில் இரவில் மது அருந்துகிறார்கள் திடீரென்று அவர்களுக்கிடையே மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் எதிர்பாரத விதமாக பிரேம் இறந்து விடுகிறார்.
இந்நிலையில் இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க பிரேம் உடலை மறைவான இடத்தில் புதைக்க முடிவு செய்து பிரேமின் உடலை கார் டிக்கியில் வைத்து கொண்டு செல்கிறார்கள்.
இந்நிலையில் பிரேமின் காதல் மனைவி போன் கால் அழைக்க 5 நண்பர்களும் அதிர்ச்சி அடைகிறார்கள். இறுதியில் நண்பர்கள் சேர்ந்து பிரேம் உடலை உதைத்தார்களா ? இல்லையா? பிரேம் மனைவியிடம் உண்மையை கூறினார்களா? இல்லையா? என்பதே ‘மனிதர்கள்’ படத்தின் மீதிக்கதை.
கதைநாயகர்களாக நடித்திருக்கும் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் அனிலேஷ் எம். மேத்யூ இசையில் பாடல் மற்றும் பின்னணி இசை கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது. இரவு நேர காட்சியை அழகாகவும் சிறப்பாகவும் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ்
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஓர் இரவில் நண்பர்களுக்குள் நடக்கிற பிரச்சனையை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குமார் ராம் இந்திரா படம் முழுவதுமே இருள், ஒரே முகங்கள், அவர்களுக்கு இடையே நடக்கும் சண்டைகள் குறித்தே கதை நகர்வதால் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு வித சலிப்பு தன்மை ஏற்படுகிறது.
மொத்தத்தில் ‘மனிதர்கள்’ மர்மம்
மதிப்பீடு : 2.5/5
நடிகர்கள் : கபில் வேலன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம்
இசை : அனிலேஷ் எம். மேத்யூ
இயக்கம் : ராம் இந்திரா
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM)
0 comments:
Post a Comment