Jora Kaiya Thattunga Movie Review


மேஜிக் நிபுணரான யோகிபாபுவின் தந்தை அதில் சிறந்தவராக இருக்கிறார். அவரிடம் சின்னச்சின்ன மேஜிக் கற்றுக்கொண்டு வரும் நிலையில், ஒரு  ரிஸ்கான மேஜிக் செய்யும் போது யோகிப்பாவுவின் தந்தை இறந்து விடுகிறார்.

இதனால் அதிர்ச்சி அடையும் யோகிபாபு, தந்தையின்  ஆன்மாவின் உதவியால் மேஜிக் கற்றுக் கொண்டு அதை செய்து வருகிறார். எனினும் அவருக்கு  சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை, இந்நிலையில்  சாந்தி ராவ் அறிமுகம் கிடைக்கிறது. யோகிபாபுவின் மேஜிக் வருமானத்திற்கு அவர் உதவி செய்கிறார்.

ஒருநாள் யோகிபாபு தங்கியிருக்கும் வீட்டிற்கு அருகில், முன்று இளைஞர்கள் யோகிபாபுவை வீண் வம்புக்கு இழுக்கிறார்கள்  இதனையடுத்து  அங்கு சில கொலைகள் நடக்கின்றன. இந்த வழக்கை விசாரிக்கும்   ஹரீஷ் பெராடி. விசாரணை மேற் கொள்ளும்  போது, யோகிபாபு காணாமல் போகிறார்.

இறுதியில், இந்த கொலைகளை செய்தது யார்.? காணாமல் போன யோகிபாபு கிடைத்தாரா? இல்லையா? என்பதே  ’ஜோரா கைய தட்டுங்க’  படத்தின் மீதிக்கதை.

மேஜிக் நிபுணராக நடித்திருக்கும் யோகிபாபு தனது வழக்கமான காமெடியின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.  யோகிபாபு காமெடி காட்சிகளை காட்டிலும் சில செண்டிமெண்ட் காட்சிகளில் நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்.

கதாநாயாகியாக வரும் சாந்திராவ், கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் ஹரிஷ் பெராடி, யோகி பாபுவின் உதவியாளராக வரும் கல்கி, மூன்று இளைஞர்களில் ஒருவராக வரும் அருவிபாலா  என படத்தில்  

இசையமைப்பாளர்  எஸ்.என்.அருணகிரி இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. மது அம்பட் ஒளிப்பதிவு படத்திற்கு கொடுத்தால் பலம்

மேஜிக் கலைஞன் வாழ்க்கையில் நடக்கின்ற சம்பவங்களை அடிப்ப்டையாக வைத்து திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் வினிஷ் மில்லினியம் சரியான கதை என்றாலும், அதை ரசிகர்களுக்கு பிடித்தமான திரைக்கதை அமைத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.  

நடிகர்கள்: யோகி பாபு, சாந்தி ராவ், ஹரிஷ் பெராடி, கல்கி, வசந்தி, மணிமாறன், ஜாகீர் அலி, அருவி பாலா,
தயாரிப்பு: ஜாகிர் அலி
இசை: எஸ்.என்.அருணகிரி
இயக்கம்: வினிஷ் மில்லினியம்
மக்கள் தொடர்பு : சதீஷ்குமார்  ( S2 மீடியா )

0 comments:

Pageviews