டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் திரை விமர்சனம்
படத்தில் சந்தானம் அவர்கள் சினிமா விமர்சகராக இருக்கிறார். இவர் நண்பர் தான் மொட்டை ராஜேந்திரன். இவர்கள் இயக்குனர் செல்வராகவனின் படத்தை பார்க்கப் போகிறார்கள். அது சினிமா விமர்சனங்களை பழிவாங்க எடுக்கப்பட்ட படம். இதில் சந்தானமும் அவருடைய ஆட்களுமே படத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால், சந்தானத்திற்கு முன்பு அவருடைய குடும்பத்தினர்கள் சென்று அங்கு மாட்டிக் கொள்கிறார்கள். அதற்குப் பின் தான் சந்தானமும் அவருடைய நண்பர் மொட்டை ராஜேந்திரனும் திரைக்குள் செல்கிறார்கள். அதோடு அந்த படத்தில் சந்தானத்தின் குடும்பம் நடிகர்களாக இருக்கிறார்கள். சந்தானத்தின் காதலி தான் பேயாகவே இருக்கிறார். அவர் ஏன் பேயாக மாறினார்? திரைக்குள் இருந்து தன்னுடைய குடும்பத்தை சந்தானம் எப்படி வெளியே கொண்டு வந்தார்? செல்வராகவனுக்கும் சந்தானத்திற்கும் இடையே என்ன பிரச்சனை? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.
அசால்டாக காமெடியில் கலக்கும் சந்தானம் இந்த படத்தில் ஹீரோவாக இருந்தாலும் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் சிரிக்க வைத்திருக்கிறார். ஆனால், சில இடங்களில் அவருடைய காமெடிகள் பெரிதாக சிரிக்க வைக்கவில்லை. கௌதம் மேனன், மொட்டை ராஜேந்திரன், செல்வராகவன் காட்சிகள் எல்லாம் அருமையாக இருக்கிறது. படத்தினுடைய செட் சூப்பர், வி எஃப் எக்ஸ் வேலையில் இயக்குனர் நிறைய கவனம் செலுத்தி இருக்கிறார்.
இசையமைப்பாளர் ஆப்ரோ இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப அமைத்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த், காமெடி கதையாக இருந்தாலும், திரைப்படத்துக்குள் மாட்டிக் கொள்ளும் ஹீரோ, என்ற பாணியில் புத்திசாலித்தனமான யோசனைகள் மூலம் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.
மொத்தத்தில் டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தை ஒருமுறை சென்று ரசித்து விட்டு வரலாம்.
0 comments:
Post a Comment