நாங்கள் திரை விமர்சனம்

 

பெற்றோர்கள் பிரிந்து வாழும் நிலையில், மூன்று சகோதரர்கள் கண்டிப்பான தனது தந்தையுடன் வசிக்கிறார்கள். பணக்கார அப்பாவுக்கு தொழில் ரீதியாக ஏற்பட்ட தோல்வியால், தங்களது சிறுவயது பருவத்தை தொலைத்துவிட்டு, வீட்டு பொறுப்புகளில் மூழ்கும் மூன்று சகோதரர்களும், எத்தகைய இன்னல்கள் வந்தாலும் அவற்றை சமாளித்து, பள்ளி பாடத்துடன் வாழ்க்கை பாடத்தையும் எப்படி கற்றுக்கொள்கிறார்கள், சிறுவர்களின் மனநிலையை புரிந்துக் கொண்டு அவர்களது தந்தை மாறினாரா? இல்லையா?, என்பதே நாங்கள்’ படத்தின் கதை.


முதன்மைக் கதாபாத்திரத்தில் தந்தையாக நடித்திருக்கும் அப்துல் ரஃபே, தன் பாத்திரத்தை அப்படியே உள்வாங்கி நடித்திருக்கிறார். 


அப்துல் ரபேவின் மகன்களாக வரும் மிதுன், ரித்திக், நிதின் ஆகிய சிறுவர்களின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை நினைத்தால் மனதைப் பிழிகிறது. 


ரஃபேவின் மனைவியாகவும் குழந்தைகளின் அம்மாவாகவும் வரும் பிரார்த்தனா, அவர்களது வாழ்க்கையில் போலவே படத்திலும் ஒட்டாமல் போகிறார்.


வேத் சங்கர் சுகவனம் இசையமைத்திருக்கிறார். அவருடைய இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை காட்சிகளின் கனத்தை உயர்த்திப் பிடித்திருக்கிறது.


எழுத்து, இயக்கம் மட்டுமின்றி ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புப் பொறுப்புகளையும் ஏற்றிருக்கிறார் இயக்குநர் அவினாஷ் பிரகாஷ்.


அவரே காட்சியை எழுதியவர் என்பதால் அதை நூறுவிழுக்காடு சரியாகத் திரையில் கொண்டுவரும் காட்சிகளையும் வைத்து நல்ல காட்சியனுபவத்தைக் கொடுத்திருக்கிறார்.


அதேபோல் படத்தொகுப்பும் கதையை நேர்த்தியாகச் சொல்லிச் செல்லும் வண்ணம் அமைந்திருக்கிறது.


ஆசை ஆசையாய் பிள்ளைகளை பார்க்க வந்துவிட்டு கண்ணீருடன் திரும்பிச் செல்லும் அந்த தாயின் வலி தான் படம் முடிந்த பிறகும் நம் நெஞ்சில் நிலைத்துப் போகிறது.

0 comments:

Pageviews