The Smile Man Movie Review
Produced by Salil Das under Magnum Movies and directed by Shyam - Praveen, 'The Smile Man' stars Sarathkumar, Sija Rose, Iniya, Sreekumar, Sureshmenon, Natarajan, Rajkumar and Malairajan.
Doctor says that Sarathkumar will lose all his memory within a year after hitting his head in a dense forest.
In 2014, Sarathkumar wrote all the cases he had seen and solved in the CBCID department in a book and published it.
In that book, the information about the case of The Smile Man is not fully written.
இந்நிலையில் ஸ்மைல் மேன் மீண்டும் பல கொலைகள் செய்கிறான். இந்த வழக்கை விசாரிக்கிறார் ஸ்ரீகுமார், இதே வேளையில் பல வருடங்களுக்கு முன் இதே ஸ்மைல் மேன் கொலைகாரன் வழக்கை விசாரித்த சரத்குமாரும் ஸ்ரீகுமாரோடு இணைந்து வழக்கை விசாரிக்கிறார்.
இதனையடுத்து ஸ்மைல் மேன் கொலைகாரன் சரத்குமாருக்கு நெருக்கமானவர்களை கொலை செய்கிறான்.. இறுதியில் சரத்குமார் ஸ்மைல் மேன் யார்? என்பதை கண்டு பிடித்தாரா? இல்லையா? என்பதே ‘தி ஸ்மைல் மேன்’ படத்தின் மீதிக்கதை.
சிபிசிஐடி போலீஸ் அதிகாரியாக கம்பீரமாகவும் விபத்திற்கு பின்னால் மறதியால் பாதிக்கப்பட்டவராகவும் இரண்டு கதாபாத்திரத்திலும் கச்சிதமாக பொருந்த கூடியவராக இருக்கிறார் சரத்குமார். வித்யாசமான கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார் கலையரசன்
சிஜா ரோஸ், இனியா, ஸ்ரீகுமார், சுரேஷ்மேனன், நடராஜன், ராஜ்குமார், மலைராஜன் என படத்தில் நடித்த அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
கவாஸ்கர் அவினாஷ் இசையில் பாடல் மற்றும் பின்னணி இசை கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் இருக்கிறது. , விக்ரம் மோகனின் ஒளிப்பதிவு கதை ஒட்டத்திற்கு துணை நிற்கிறது.
கொலைகாரனுக்கு போலீசுக்கும் இடையே நடக்கும் மோதலை சஸ்பென்ஸ் திரில்லர் கலந்து திரைப்டமாக உருவாக்கி இருக்கிறார்கள் இயக்குநர்கள் ஷ்யாம் - பிரவீன் படத்தின் இறுதியில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் யாரும் எதிர்பாராத ஒன்றாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘தி ஸ்மைல் மேன்’ மிரட்டுபவன்
நடிகர்கள்: சரத்குமார், ஷிஜா ரோஸ், இனியா, ஸ்ரீகுமார், சுரேஷ்மேனன், நடராஜன், ராஜ்குமார், மலைராஜன்
இசை: கவாஸ்கர் அவினாஷ்
இயக்கம்: ஷ்யாம் – ப்ரவீன்
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா
0 comments:
Post a Comment