புஷ்பா 2 திரை விமர்சனம்

 

புஷ்பா (அல்லு அர்ஜுன்) ஒரு சிறு தொழிலாளியிலிருந்து சிண்டிகேட் உறுப்பினராகவும் இறுதியில் உரிமையாளராகவும் உயர்ந்து, சக்திவாய்ந்த கடத்தல்காரராக மாறுகிறார். ஆனால் எஸ்பி பன்வர் சிங் ஷெகாவத் (ஃபஹத் பாசில்) உடனான அவரது பகை தீவிரமடைகிறது. இதற்கிடையில், எம்.பி சித்தப்பாவை (ராவ் ரமேஷ்) முதல்வராக்க புஷ்பா தனது தனித்துவமான உத்திகளைப் பயன்படுத்தி சரத்தை இழுக்க திட்டமிட்டுள்ளார். செக்காவத்தை தைரியமாக சவால் விடுகிறார், சிவப்பு சந்தனத்தை நாட்டிற்கு தெரியாமல் கடத்துவதாக உறுதியளித்தார். இதற்கிடையில், புஷ்பாவின் மூத்த சகோதரனின் குடும்பம் பிரச்சனையில் இறங்குகிறது. என்ன நெருக்கடி? அதில் புஷ்பா ஈடுபடுவாரா? மேலும் சித்தப்பாவை அவர் ஏன் முதல்வர் ஆக விரும்புகிறார்? என்பதே படத்தின் மீதி கதை.


நாயகியாக நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுனுக்கு மனைவியான பிறகு பெரியதாக வேலை இருக்காது என்று எண்ணும் நிலையில், அல்லு அர்ஜுனுக்காக அவர் பேசும் வசனங்கள் மற்றும் அவருடனான மூட் கெமிஸ்ட்ரி ஆகியவை மூலம் தனது திரை இருப்பை அமர்க்களமாக நிரூபித்திருக்கிறார்.


 முதல் பாகத்தில் வில்லனாக அறிமுகமாகி அட்ராசிட்டி செய்த பகத் பாசில், இதிலும் அட்ராசிட்டியோடு அறிமுகமாகி நடிப்பில் அசத்துகிறார். புஷ்பாவை ஜெயிக்க வேண்டும் என்ற அவரது முயற்சி தோற்றுப் போனாலும், அந்த இடத்தில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு அவரை மிகச்சிறந்த நடிகராக வெற்றி பெற செய்து விடுகிறது.


 அரசியல்வாதியாக நடித்திருக்கும் ராவ் ரமேஷ், முதல் பாகத்தின் வில்லன் சுனில், அவரது மனைவியாக நடித்த அனுஷ்யா பரத்வாஜ் ஆகியோர் இந்த பாகத்தில் மட்டும் அல்ல மூன்றாம் பாகத்திலும் பயணிக்கும் வகையில் அவர்களது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


ஒளிப்பதிவாளர் மிரோஷ்லவ் புரோன்ஷெக்கின் கேமரா புஷ்பாவின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் வலம் வந்ததோடு, அனைத்துக் காட்சிகளையும் பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறது.


ரூபன் மற்றும் கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆகியோரது படத்தொகுப்பு காட்சிகளை தொய்வில்லாமல் நகர்த்திச் சென்றாலும் 3 மணி நேரம் 20 நிமிடம் என்ற படத்தின் அதிகப்படியான நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.தேவிஸ்ரீபிரசாத்தின் இசையில் பாடல்கள் இரசிக்கும்படி இருக்கின்றன.சாம்,சி.எஸ் பின்னணிஇசையில் காட்சிகளுக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.


இயக்குநர் சுகுமார், புஷ்பா என்ற கூலித்தொழிலாளியை செம்மரக் கடத்தல் கூட்டத்தின் தலைவனாக உருவெடுக்க செய்ததோடு, அவரது அடுத்த நிலைகளைக் கொண்டு இந்த இரண்டாம் பாகத்தின் திரைக்கதையை எழுதி இருந்தாலும், அவரது மனைவி செண்டிமெண்ட் மற்றும் அப்பா பெயரை பயன்படுத்த முடியாத சோகம் இரண்டையும் திரைக்கதையுடன் அழுத்தமாக பயணிக்க வைத்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

0 comments:

Pageviews